அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம்

Updated : நவ 09, 2020 | Added : நவ 09, 2020 | கருத்துகள் (133)
Share
Advertisement
சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் அறிவிக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை ஓட்டுகளை வென்று இருவரும் ஜன.,20ல்
DMK, Stalin, KamalaHarris, Tamil, Letter, திமுக, தலைவர், ஸ்டாலின், கமலாஹாரிஸ், கடிதம், தமிழ்

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் அறிவிக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை ஓட்டுகளை வென்று இருவரும் ஜன.,20ல் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பொறுப்பேற்க உள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசின் வெற்றியை அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


latest tamil newsகமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்று தமிழகத்திற்கு பெருமையளிப்பதாக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கூறியிருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், கமலா ஹாரிசுக்கு தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் தமிழில் வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு நம் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் இனிய செய்தி.


latest tamil newsஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவையும் ஆள தகுதி படைத்தவர் என்பதை உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்படுத்தி காட்டியுள்ளது.உங்கள் ஆட்சிக்காலம் அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து தமிழர் நம் பாரம்பரியப் பெருமையை உலகுக்கு பறை சாற்றுவதாக அமையட்டும். தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை எனது மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
15-நவ-202004:30:33 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran அமெரிக்காவில் பல நாட்டினர் குடியேறி இருக்கிறார்கள். அதில் இந்தியரும் ஒன்று. ஆயினும் எவனும் எவளும் நான் இந்தியன் என்று மார் தட்டுவதில்லை நான் அமெரிக்கா நாட்டவன் என்று தான் சொல்வார்கள். இந்த பகுத்தறிவு கட்சிகளுக்கு இவ்வளவு கூட தெரியாமல் போயிற்றே?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
11-நவ-202000:01:48 IST Report Abuse
Mohan ARUDRA, AVAN IVAN RU SOLLATHEENGA APPURAM AVANUKKU KOPAM VANTHIDUM.
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
10-நவ-202016:35:47 IST Report Abuse
மோகன் சுடலை பேனாவை சும்மா கைல வச்சு எழுதுற மாதிரி ஆக்ட் கொடுக்குறாரு. இவருக்கு எழுத தெரியுமா என்பதே சந்தேகம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X