அரசியல் செய்தி

தமிழ்நாடு

கை, கால்களை முறிப்போம்: பாஜ., தலைவர் எச்சரிக்கை

Updated : நவ 09, 2020 | Added : நவ 09, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
கோல்கட்டா: கை,கால்,தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்.மேற்குவங்கத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக ஆளும் திரிணாமுல் காங்., பாஜ., உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. மேற்குவங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் பாஜ., தேசிய தலைவர்
WestBengal, BJP_Chief, BrokenLimbs, Death, Threat, Rally, DilipGosh, மேற்குவங்கம், பாஜக, தலைவர், திலீப்கோஷ், கை, கால், முறிக்கப்படும், எச்சரிக்கை, மிரட்டல்

கோல்கட்டா: கை,கால்,தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்.

மேற்குவங்கத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக ஆளும் திரிணாமுல் காங்., பாஜ., உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. மேற்குவங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ், பொதுக்கூட்டம் நடத்தி, முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.


latest tamil news



இந்நிலையில், ஹலிடா பகுதியில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் திலீப் கோஷ் பேசியதாவது:
மம்தா கட்சியினர் 6 மாதங்களுக்குள் தங்களை திருத்திகொள்ள வேண்டும். இல்லையெனில், மம்தா கட்சியினரின் கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும். திரிணாமுல் காங்., கட்சியினரின் ஒழுங்கீன செயல் அதிகரித்தால் வெளியே வரும் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாது; மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். அப்படியிருந்தும் ஒழுங்கீனம் அதிகரித்தால், கல்லறைக்குத்தான் அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் பேசினார். திலீப் கோஷின் இந்த பேச்சு, மேற்குவங்க அரசியலில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
10-நவ-202012:24:29 IST Report Abuse
K.n. Dhasarathan இந்த மாதிரி ஆட்களை முதலில் விசாரணை இல்லாமல் உள்ளே தள்ள வேண்டும், அந்த நட்ட முதல் அமித் ஷா வரை எவர் கேட்டாலும் வெளி வர முடியாதபடி குண்டாசில் உள்ளேபோட நேர்மையான காவல்துறை மற்றும் நீதி துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். பாகிஸ்தானில் இருக்கும் சுதந்திரம் கூட இந்தியாவில் இல்லையா ? இதில் யார் குறுக்கே வந்தாலும் அவர்களையும் குண்டாசில் உள்ளே போடுங்கள். பிறகு பாருங்கள் சட்டம் ஒழுங்கு தானாக வரும்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-நவ-202005:21:26 IST Report Abuse
NicoleThomsonநீ எப்ப்போ போயி பாகிஸ்தானை பார்த்து வந்தாய் ? உன்னை போன்ற எல்லாம் தெரிஞ்சவங்க தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாய் எழுத முடியும்...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-நவ-202010:31:52 IST Report Abuse
Sampath Kumar இந்த வெண்ணை வெட்டி வீரசாமிகள் பிஜேபியில் இருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு இப்படி எல்லா கட்சிக்காரனும் பேசினால் நாடு தாங்குமா ? பிஜேபிக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது இனி கஷ்டம் தான்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-நவ-202005:22:13 IST Report Abuse
NicoleThomsonஅப்படியே இருந்தாலும் மூலபத்திரரை போன்று இருப்போர் ஜெயிக்க வைப்பார்கள் பாக்குறீங்களா?...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
10-நவ-202008:19:01 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இப்படி பேசி பிஜேபியின் பேரை கெடுக்க சிலபேர் இருக்கிறார்கள். ஆனால் மம்தாவின் ஆட்கள் மட்டும் சாதாரணமாவார்கள் இல்லை. ரௌடிசம் பிறப்பிடம் tmc
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X