3வது கட்ட சோதனை:பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி 90 சதவீத வெற்றி

Updated : நவ 09, 2020 | Added : நவ 09, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக 3வது கட்ட தடுப்பூசி பரிசோதனையில் 90 சதவீதம் பேருக்கு நல்ல பலன் கொடுத்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் இன்று அறிவித்துள்ளன. அவசரகால பயன்பாட்டுக்காக இம்மாதம் முதலே இதை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நிர்வாகத்திடம் அனுமதி கேட்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 16 முதல் 85 வயதுக்கு

வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக 3வது கட்ட தடுப்பூசி பரிசோதனையில் 90 சதவீதம் பேருக்கு நல்ல பலன் கொடுத்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் இன்று அறிவித்துள்ளன.latest tamil newsஅவசரகால பயன்பாட்டுக்காக இம்மாதம் முதலே இதை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நிர்வாகத்திடம் அனுமதி கேட்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 16 முதல் 85 வயதுக்கு உட்பட்டோர் இடம் இந்த தடுப்பூசியை செலுத்தி பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவன தலைவர் ஆல்பர்ட் கூறுகையில், அறிவியல் மற்றும் மனித குலத்துக்கு இது ஒரு நல்ல நாள். எங்களது தடுப்பூசி தயாரிப்பு பணியின் முக்கியமான கட்டத்திற்கு வந்து சேர்த்துள்ளோம். தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் தயாரித்த தடுப்பூசி வெற்றி பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


latest tamil newsஇதுவரை 6 நாடுகளில், 43 ஆயிரத்து 500 பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு பரிசோதனை செய்துள்ளோம். இந்த தடுப்பூசி காரணமாக பெரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
இந்த மருந்து எவ்வளவு காலத்துக்கு கொரோனாவை தடுக்க பயன்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
10-நவ-202006:05:19 IST Report Abuse
Fastrack ஆஸ்ட்டிரா ஜென்கா .. ஜான்சன் ஜான்சன் ..க்ளெக்ஸோ ..போன்ற நிறுவனங்களும் இதே போல செய்தி வெளியிட நேரிடும் .. வியாபார யுக்தி இல்லையே ..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09-நவ-202021:48:04 IST Report Abuse
NicoleThomson மிச்சம் இருக்கும் பத்து சதவீதம் பேருக்கு என்ன ஆனது?
Rate this:
Cancel
senthilnathan - ramanathapuram,இந்தியா
09-நவ-202021:12:14 IST Report Abuse
senthilnathan மருந்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X