கடைகளுக்கு முன் தடுப்பு...

Added : நவ 10, 2020
Advertisement
பாவளிக்கு துணி மற்றும் சில பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் கடை வீதிக்கு சென்றனர்.''அப்பப்பா... என்ன கூட்டம் பாருங்கக்கா. சமூக இடைவெளின்னா என்னன்னு கேப்பாங்க போல. தொற்று பரவினா என்னாகறது?'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.''என்ன பண்றது மித்து. நம்ம மக்கள், கொேரானாவோட வாழ பழகிட்டாங்கன்னு நினைக்கிறேன். போன வாரம், சி.எம்., திருப்பூருக்கு வந்தாருல்ல. அவருக்கு வரவேற்பு
 கடைகளுக்கு முன் தடுப்பு...

பாவளிக்கு துணி மற்றும் சில பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும் கடை வீதிக்கு சென்றனர்.''அப்பப்பா... என்ன கூட்டம் பாருங்கக்கா. சமூக இடைவெளின்னா என்னன்னு கேப்பாங்க போல. தொற்று பரவினா என்னாகறது?'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.''என்ன பண்றது மித்து. நம்ம மக்கள், கொேரானாவோட வாழ பழகிட்டாங்கன்னு நினைக்கிறேன். போன வாரம், சி.எம்., திருப்பூருக்கு வந்தாருல்ல. அவருக்கு வரவேற்பு தர்ற இடத்துல எல்லாம், நெருக்கியடிச்சு நின்ன கூட்டத்த பார்த்து, போலீஸ்காரங்களே மிரண்டுட்டாங்களாம். அப்பப்ப, சானிடைசர் போட்டு கைய கழுவிட்டே வேல பாத்திருக்காங்க,''''சமூக இடைவெளியோட, நாங்க ஆர்ப்பாட்டம் பண்ணா கேஸ் போடுற போலீஸ், ஆளுங்கட்சியை சேர்ந்தவங்களாக இருந்தா, கொரோனா வராதா? இவங்க மேல கேஸ் போட வேண்டியதுதானே'னு தோழர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டிருக்காங்க...'' என்றாள் சித்ரா.''அக்கா, மாஜி, 'ஆனந்தமே' இல்லாம இருக்காறாமே,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஏன், என்னாச்சுடி?''''கலெக்டர் ஆபீசில, சி.எம்., கலந்துகிட்ட, மீட்டிங்ல மாஜி மந்திரி, தன்னையும் அனுமதிக்க கேட்டிருக்காரு. ஆனா, 'அரசு நிர்வாகம் சார்ந்து பொறுப்பில இருந்தா மட்டுந்தான், 'அலோ' பண்ணுவோம்,'னு சொல்லிட்டாங்களாம். அதனால, ஓரமா நின்னு, 'பொக்கே' மட்டும் கொடுத்துட்டு வந்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.''அதே மாஜிக்கும், 'சவுத்'துக்கும் லடாய் உச்சத்துல இருக்கு. சி.எம்., வர்றப்ப மட்டும், ஒண்ணா இருக்க மாதிரி காமிச்சுட்டு, அதுக்கப்பறம் வழக்கம்போல, கோஷ்டி கானத்தை ஆரம்பிச்சுட்டாங்க. அதில, ஒரு மேட்டரை சொல்றேன் கேளு,''''சவுத் சைடில் இருக்கிற முக்கியமான ஆட்களுக்கு, 'பார்' வச்சு தர்றேன் சொல்லி, அவங்களை இழுக்கறாங்களாம். இப்டியும் உண்டான்னு, விஷயம் தெரிஞ்சு சூரிய கட்சி பிரமுகர்கள் சிரிக்கறாங்களாம்,''இருவரும் பேசியபடியே, வண்டியை பார்க்கிங் செய்து, துணிக்கடைக்குள் நுழைந்து, ஆடை ரகங்களை செலக் ஷன் செய்ய துவங்கினர். ஒரு வட மாநில இளைஞர், 'குட்கா' பாக்கெட்டை பிரித்து, வாயில் போட, ''ஏம்பா... கடைக்குள்ள பாக்கு போடக்கூடாது,'' என ஊழியர் கண்டித்ததும், அவர் வெளியேறினார்.''குட்காவை கட்டுப்படுத்தவே முடியாது போல மித்து. இப்டித்தான், கோழிப்பண்ணை ஊர்ல, மூட்டை மூட்டையா போதை பொருள் பிடிச்சாங்கல்ல. அவங்ககிட்ட, வியாபாரிங்க, மொத்தமாக வாங்கி விக்கறாங்களாம்,''''அதில, 'டாப்'பில் உள்ள ஒரு வியாபாரி யார் என்பது தெரிஞ்சும்கூட, போலீஸ் சைலன்டா இருக்காங்களாம். இத தெரிஞ்சுகிட்ட, குட்கா விக்கற வியாபாரிகளுக்கு சப்போர்ட் பண்ற போலீஸ்காரங்க 'லிஸ்ட்' எடுக்க சொல்லிட்டாராம்,'' என்றாள் மித்ரா.ஒரு வழியாக துணி எடுத்துட்டு, வெளியே வந்த இருவரும், எதிரில் இருந்த, அன்னை ஸ்டோர்ஸ் பெட்டிக்கடையில், தண்ணீர் பாட்டில் வாங்கிய படி, ஸ்வீட்ஸ் வாங்க சென்றனர்.தெருவோர குழாயில் தண்ணீர் வீணாகி கொண்டிருக்க, அதைப்பார்த்த சித்ரா, ''இப்ப இருக்க, தண்ணி கஷ்டத்துல, இப்படி வேஸ்ட் ஆகுதே,'' என்றாள் சித்ரா.''இதென்னக்கா பெரிசு, குடிக்கிற தண்ணிய கோழி பண்ணைக்கு, அதிகாரிங்க தாரை வார்த்து கொடுத்துட்டாங்க,'' மித்ரா சொன்னாள்.''இந்த அநியாயம் எங்கடி நடந்தது?'' என்றாள் சித்ரா.''தாராபுரத்துக்கு பக்கத்தில பெரமியம் கிராமத்திலதான். சூரிய கட்சியின் முக்கிய நிர்வாகியின் சொந்தக்காரரோட கோழிப்பண்ணைக்கு, அமராவதி ஆத்துல இருந்து, ஏழு கிலோ மீட்டர் துாரத்துக்கு, பைப் போட்டு, தண்ணிய கொண்டு போயிருக்காங்க,''''இது, அதிகாரிகளுக்கு தெரியாதா...?''''அதெப்படி தெரியாம இருக்கும். 'வாங்க வேண்டியதை வாங்கிட்டுத்தான்,' அவங்க பண்ணியிருக்காங்க. இதை கண்டுபிடிச்ச நேர்மையான ஒரு அதிகாரி, சத்தம் போட்டு, குழாய்களை துாக்க வச்சிட்டாராம்,''''எதிர்க்கட்சியா இருந்தாலும், செல்வாக்கை பயன்படுத்தி, அதிகாரிய டிரான்ஸ்பர் செய்ய வச்சுட்டார். இதிலென்ன, கொடுமைன்னா, அவர் டிரான்ஸ்பர் ஆகி போனதுக்கு அப்புறம், மறுபடியும் குழாய் பதிச்சிட்டாங்களாம். இதை கண்டுக்காம இருக்க, ரெவின்யூ ஆபீசர்களுக்கு, 'லகரத்தில்' கவனிப்பாம்,'' என, ஆவேசமாக சொன்னாள் மித்ரா.''ரிடையர்டு ஆன அதிகா ரிங்க கிட்டேயே கையை நீட்ற நம்ம ஆபீசர்ஸ், கட்சிக் காரங்கள சும்மா விட்டுருவாங்களா என்ன?'' என்றாள் சித்ரா.''நீங்க யாரைங்க்கா சொல்றீங்க...''''கோழிப்பண்ணை ஊரில், ரெவின்யூ பிரிவில வேல பார்த்து, ரிட்டையர்டு ஆன ஒருவர், சொந்தக்காரருக்கு, சர்டிபிகேட் வாங்க ேபானாரு. 10 ஆயிரம் வெட்டினாத்தான் தருவேன்னு, சம்மந்தப்பட்டவர், சொல்ல, 'நானும் ரெவின்யூல தான் வேலை பார்த்திருக்கேன். என்கிட்டயேவா?'ன்னு சத்தம் போட்டிருக்கார்.''அதுக்கெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. கொடுத்தாதான் வேல நடக்கும்னு, ஸ்டிரிட்டா சொல்ல, 2 ஆயிரம் கொடுத்து, சர்டிபிகேட் வாங்கிட்டு போனாராம்,''அப்போது, மித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது. ''யாரு, கண்ணன் அங்கிளா? கடைவீதிக்கு வந்திருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்,'' கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தாள்.''பணத்துக்காக, டாக்குமென்டையே மாத்தறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அப்படியா! தெளிவா சொல்லுங்க்கா''''நெருப்பெரிச்சல், கூலிபாளையத்தில, நிலம் சப்-டிவிஷன் செஞ்சாங்க. ஆனா, சம்பந்தம் இல்லாத பலரிடம், பணத்தை வாங்கிட்டு, அவங்க பேரையும் சேத்துட்டாங்க. இது தெரிஞ்சுகிட்ட, நிலத்தோட ஓனர்ஸ், ரெவின்யூ ஆபீசில போய் டாக்குமென்ட் செக் பண்ணப்போ, ஜூலை, ஆக., மாதம் சப்-டிவிஷன் செய்த டாக்குமென்ட்ஸ், இல்லையாம்,''''இதனால, நிலத்தோட சொந்தக்காரங்க, 'ஷாக்' ஆகி, கலெக்டருக்கு, டி.ஆர்., கிட்ட மனு கொடுத்திருக்காங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.இனிப்புக்கடைக்குள் நுழைந்த இருவரும், தேவையான அளவு இனிப்பு, காரம் வாங்கி, குமரன் ரோடு வழியே, பட்டாசு கடைக்கு சென்றனர்.''ஏன் மித்து, எனக்கு ஒரு சந்தேகம், ரோட்டின் ரெண்டு பக்கமும், போலீஸ்காரங்க பேரிகார்டு வைச்சு இருக்காங்க. ஆனா, சில கடைகளுக்கு முன்னாடி, வண்டிங்க பார்க்கிங் பண்ற மாதிரியும், சில கடைகளுக்கு முன்னாடி வண்டிங்க பார்க்கிங் செய்ய முடியாத மாதிரியும் பேரிகார்டு வச்சு இருக்காங்களே; என்ன விஷயம்னு உனக்கு தெரியுமா?''''கடைக்கு முன்னாடி தடுப்பு வைச்சா, வண்டிக நிக்காது; இதனால, வியாபாரம் பாதிக்கும்னு சொல்லி, சில கடைக்காரங்க போலீஸ்கிட்ட 'டீல்' பேசிட்டாங்களாம். இதுல என்ன கொடுமைன்னா, வசூல் பண்ற விவகாரத்துல, 'லா அண்ட் ஆர்டருக்கும்' 'டிராபிக்'கும் இடையே 'டக் ஆப் வார்' நடக்குதாம்'' என்றாள் சித்ரா.''இதேபோல, ஒரு விஷயத்தை கேளுங்க. சிட்டியில, கிரைம் நடக்காம இருக்க, ஸ்பெஷல் டீம் போட்டிருக்காரு கமிஷனர். இவங்க பிடிச்சு தர்ற குற்றவாளிகள் மேல கேஸ் போட, ஸ்டேஷன் போலீஸ் தயங்கறாங்களாம். இதப்பத்தி, 'ஸ்பெஷல் டீம்' போலீஸ், கமிஷனர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்களாம்,'' என்று மித்ரா சொன்னதும், ''இப்டி இருந்தா, தீபாவளி நேரத்தில, எப்படி 'கிரைம் ரேட்' குறைக்கறதாம்,'' சலித்து கொண்டாள் சித்ரா.ஸ்வீட் வாங்கி விட்டு இருவரும் புறப்பட்டனர். அப்போது, குடிமங்கலம் வழியே உடுமலை செல்லும் அரசு பஸ் வரவே, அதைப்பார்த்த மித்ரா, ''உடுமலை சப்-டிவிஷனில், ரெண்டு ஸ்டேஷன்ல வேல பார்த்த, ஒற்றர் படையை சேர்ந்த ரெண்டு பேரை ஸ்டேஷன் டியூட்டிக்கு, மாத்திட்டாங்க,'''ஆனா, ட்யூட்டில சேராம, மெடிக்கல் லீவ் போட்டுட்டாங்க. எப்படியாவது, இப்ப இருக்கிற அதிகாரிய மாத்த வச்சுட்டு, பழைய இடத்துக்கே போயிடணும்னு, சபதம் போட்டுட்டு, காய் நகர்த்தறாங்களாம்,'' என்றாள்.அதற்குள் பட்டாசு கடை வரவே, ''மித்து, நீ போய் பெரிய கம்பி மத்தாப்பு மட்டும், ரெண்டு பாக்ஸ் வாங்கிட்டு, வா,'' என்று சொல்லி, வெளியே நின்று கொண்டாள். அப்போது கடையில் இருந்த ஸ்பீக்கரில், 'செந்தில்குமார், செல்வராஜ் உடனே வரவும்,' என அறிவிப்பு வெளியானது.ஓரிரு நிமிடத்தில், மத்தாப்பு வாங்கி கொண்டு மித்ரா வந்தாள். அப்போது, வானில், ராக்கெட் பட்டாசு வெடித்ததில், பல வண்ணத்தில் வெளிப்பட்ட ஒளி, தீபாவளி வந்து விட்டதை அறிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X