'கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது'

Updated : நவ 10, 2020 | Added : நவ 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நியூயார்க் : கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த, பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து, பைசர் நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த, 44

நியூயார்க் : கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.latest tamil newsஜெர்மனியைச் சேர்ந்த, பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து, பைசர் நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த, 44 ஆயிரம் பேரிடம், கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 94 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.


latest tamil newsஇது குறித்து, பைசர் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர், பில் கிருபர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி ஆய்வு முடிவு நம்பிக்கையூட்டும் விதத்தில் உள்ளது. அடுத்த கட்டமாக, இம்மாத அவசரகால சிகிச்சைக்கு, தடுப்பூசி மருந்து செலுத்த அனுமதி கோரி, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் விண்ணப்பிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.உலகிலேயே, ரஷ்யா தான், முதன் முதலாக கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்த பெருமையை தட்டிச் சென்றது.இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த, 10 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில், இறுதிக் கட்டத்தில் உள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களில், ஏதேனும் ஒன்று, ஜனவரியில் தடுப்பூசி மருந்தை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
10-நவ-202019:09:07 IST Report Abuse
S. Narayanan ஆறுதலான அறிக்கை. விரைந்து செயல் பட வேண்டும்.
Rate this:
Cancel
T.G.Balaguru - Rajapalayam(Residency at Bhimavaram,இந்தியா
10-நவ-202013:33:44 IST Report Abuse
T.G.Balaguru அட போங்கய்யா, நீங்க மருந்து கண்டுபிடிக்கிறிங்களோ இல்லையோ அதுக்குள்ளே கொரோன உங்களுக்கு டாட்டா காமிச்சுட்டு போயிடும் இன்னும் கொஞ்சநாளில்,
Rate this:
Cancel
K RAGHAVAN - chennai,இந்தியா
10-நவ-202009:40:28 IST Report Abuse
K RAGHAVAN sri i have taken 2sets of test injection in CHENNAI DMS I FOUND 100% OK SO all can try when our GOVT gave clearance to the injection.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X