புதுடில்லி : இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில பொருட்களை ஆன்லைனில் விற்பதாக கூறி அமேசானை புறக்கணிக்க சொல்லி டுவிட்டரில் டிரண்ட் ஆனது.
உலகின் மகிப்பெரிய ஆன்லைன் இணையதளம் அமேசான். இந்நிலையில் அமேசான் தளத்தில் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலான சில பொருட்கள் விற்பனையாவது சிலர் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டுகின்றனர். அதாவது, கால்மிதியடி என்று கூறப்படும் 'டோர்மேட்'டில் 'ஓம்' என்ற முத்திரை இடம் பெற்றுள்ளது. அதேப்போன்று ஆண், பெண் இருபாலரின் உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் முகங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இதுமாதிரியான சர்ச்சைகள் வெடித்த நிலையில் இப்போது மீண்டும் இதேப்போன்று சர்ச்சை வெடித்துள்ளது.

அமேசான் தளம் இந்துக்களை அவமதிக்கும் வகையிலேயே பொருட்களை விற்பனை செய்கிறது. உடனடியாக அதனை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளத்தில் குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. பலரும் ''நான் அமேசானை புறக்கணிக்கிறேன்'' என்ற வாசகத்தை ஏந்தி போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்களது மொபைல் போன்களில் அமெசான் செயலியை நீக்கிவிட்டதாக ஸ்கிரீன்ஷார்ட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில் '#BoycottAmazon' என்ற ஹேஷ்டாக் தேசியளவில் டிரெண்ட் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE