அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., தனித்துவிடப்படும்: குஷ்பு ஆருடம்

Updated : நவ 10, 2020 | Added : நவ 10, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாக கருதி தனித்துவிடப்படலாம் என சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.கடந்த 2010 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு, முதலில் திமுக.,வில் தலைமை கழகப் பேச்சாளரானார். 2011ல் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் அவருக்கு ‛சீட்' கொடுக்கப்படாததால், பாஜ., அல்லது காங்.,
Kushboo, BJP, Congress, குஷ்பு, காங்கிரஸ், சுமை, தனித்துவிடப்படும், பாஜக

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாக கருதி தனித்துவிடப்படலாம் என சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு, முதலில் திமுக.,வில் தலைமை கழகப் பேச்சாளரானார். 2011ல் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் அவருக்கு ‛சீட்' கொடுக்கப்படாததால், பாஜ., அல்லது காங்., என தேசிய கட்சியில் சேர முடிவெடுத்தார். 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, செய்தித்தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டாலும், அங்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர், பா.ஜ.,வுக்காக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார்.


latest tamil news


இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வரக்கூடிய தமிழக சட்டசபை தேர்தலில் திமுக., கூட்டணியில் இருக்கும் காங்., தனித்துவிடப்படலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டதாவது: தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் கூட்டணிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாக கருதி தனித்துவிடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-202016:04:40 IST Report Abuse
Bhaskaran வாக்குகள் அதிகம் பெறாவிட்டாலும் இன்று அகிலஇந்திய அளவில் வாக்குவங்கி இருக்கும் ஒரேகட்சி காங்கிரஸ் தான் தேசிய அளவில் உதவாக்கரை தலைமை .தமிழ்நாட்டில் அறிவாலயத்துக்கு காவடியெடுபதில் யார்முதலில்செல்வது என்பதில் வெட்டுக்குத்தபிறகு கிடைக்கும் சொல்ப யார் ஆதரவாளர்களுக்கு கொடுப்பது என்பதில் வேஷ்டிபரிப்பு சண்டை இடங்களுக்கு .பின் இவர்கள் எப்படி மோடிக்கு மாற்றாக மக்களை அணிதிரட்டமுடியும் .அந்தோணி போன்ற ஒருசில நேர்மையான மாநில தலைவர்கள் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் கொஞ்சமாவது தேறலாம்
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
11-நவ-202009:08:52 IST Report Abuse
Karthikeyan K Y குஷ்புவை பேச்சாளாராக நம்பி தேர்தலை சந்தித்து திமுக தோற்றது , அதே காங்கிரஸும் தோற்றது இப்போது பி ஜே பி அதே தவறை செய்கிறது மக்கள் திட்டங்களிலும் தொழில்துறையில் வாழ்வாதாரத்திலும் ஜீவாதாரத்திலும் எந்த கட்சி முன் வரைவு கொடுக்கிறதோ antha கட்சிதான் கண்டிப்பாக இந்த தேர்தலில் மக்களின் வோட்டு இந்த தேர்தல் சிறந்த தலைமை இல்லாமல்தான் திமுக அதிமுக காட்சிகள் kalam இறங்குகின்றன பணத்தை நம்பி மதத்தை நம்பி ஜாதியை நம்பி இதுவரை இறங்கின திமுக பிஜேபி மதத்தை நம்பி இருக்கின்றன திமுக அதிமுக ஜாதியை நம்பி இருக்கின்றன தமிழக மக்கள் உணர வேண்டும்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-நவ-202008:29:57 IST Report Abuse
Sampath Kumar அது மாதிரி தான் நீங்களும் விடப்படுவீர்கள் அப்போ தெரியும் உங்க வலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X