சென்னை : ''தமிழர்கள் நலனுக்கு தீங்கு என்றால் பா.ஜ. முதலில் குரல் கொடுக்கும்'' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்தார்.
நான்காம் நாள் 'வெற்றிவேல் யாத்திரை'யில் பங்கேற்க புறப்பட்ட போது சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஸ்ரீபெரும்புதுாரில் 'டிவி' நிருபர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பொதுமக்கள் முருக பக்தர்கள் ஆதரவோடு யாத்திரை தொடர்கிறது. பொதுமக்கள் ஆன்மிக பக்தர்களும் கைதாகின்றனர். அ.தி.மு.க. ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் யாத்திரை தொடரும்.எங்கள் கட்சிக்கென ஒரு கொள்கை உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி. அவர்களுக்கு தனி கொள்கை உண்டு.

நாங்கள் திட்டமிட்டபடி யாத்திரையை தொடர்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் தங்கள் விருப்பப்படி கோவிலுக்கு செல்ல உரிமையுண்டு.ஹிந்து கடவுள்களை தி.மு.க. தொடர்ந்து இழிவுப்படுத்துகிறது. தேவர் நினைவிடத்திற்கு ஸ்டாலின் போலி வேஷமிட்டு சென்றார். அவரது வேஷம் அந்த இடத்திலேயே கலைந்து விட்டது. ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற அங்கு சென்றது தெரிந்து விட்டது.
தமிழக காங். தலைவர் அகராதியை நன்றாக படித்து பார்க்க வேண்டும். வேல் தீய சக்தியை அழிக்க பயன்பட்டது.கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்கின்றனர். கனிமொழி கோவிலுக்கு சென்றால் தெரியும். தமிழக பா.ஜ. எப்போதும் தமிழர்கள் பண்பாட்டை உரிமையை தமிழ் மொழியை விட்டு கொடுக்காது. தமிழக நலனுக்கு தொடர்ந்து பாடுபடுவோம். தமிழர்கள் நலனுக்கு தீங்கு என்றால் பா.ஜ. முதலில் குரல் கொடுக்கும்.இவ்வாறு முருகன்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE