
சென்னையில் கிடைக்கும் சென்ன பட்டணம் மரவிளையாட்டுப் பொம்மைகளால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்தவர்கள் முரளி,குருநாராயணன்,உதயகிரி.பாரம்பரிய உணவுப் பொருட்களால் பயனடைந்த இவர்கள் நம்மைப் போலவே மக்களும் நன்மை அடைய வேண்டும் என்ற காரணத்தினால் போரூர்,குன்றத்துார் ரோட்டில் ‛வெஜ் அண்ட் மோர்' என்ற பெயரில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் விற்கும் கடையை திறந்துள்ளனர்.

நம்மாழ்வார் பரிந்துரைத்த அனைத்து விதமான அரிசி உள்ளீட்ட உணவுப் பொருட்கள் விற்பதுடன் குழந்தைகளுக்கான சென்ன பட்டணத்து மரபொம்மைகளும் விற்று வருகின்றனர்.
ஆந்திராவின் எட்டிகுப்பா பொம்மைகள்,ராஜஸ்தான் துணி பொம்மைகள்,கொண்டப்பள்ளி பொம்மைகள்,கேரளா மரப்பாஞ்சி பொம்மைகள் போல சென்ன பட்டணத்து பொம்மைகளும் நாடு முழுவதும் பிரபலம்.மலிவு விலை சீனப்பொருட்கள் வருகையால் நமது பாரம்பரிய பொம்மைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்திருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சீனப்பொருட்களுக்கு விடை கொடுத்து வருவதால் மீண்டும் நமது பராம்பரிய பொருட்கள் எழுச்சி அடைந்துவருகிறது.

கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டதில் உள்ள சென்ன பட்டணத்தை ஆண்ட சிற்றரசன் ஒருவன் தமது மக்களை கலைப்பொருட்கள் தயரரிப்பில் ஈடுபடுத்தினான்.அங்குள்ள மரங்களில் செய்யப்படும் மரபொம்மைகள் பிரபலமடைந்தன.சுமார் இருநுாறு வருடங்களுக்கு மேலாக புகழ் பெற்று விளங்கும் சென்ன பட்டணத்து பொம்மைகள் உலகம் முழுவதும் சென்று வருகிறது.

சென்ன பட்டணத்து பொம்மைகளின் விசேஷம் சின்ன குழந்தைகள் வாயில் வைத்தாலும் கடித்தாலும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரத்தாலும், மூலிகை வண்ணத்தாலும் உருவாக்கப்பட்டதாகும். இதன் காரணமாக சின்ன குழந்தைகளுக்கு சென்ன பட்டணம் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் உற்றோர் அதிகம்.இந்த பொம்மைகளைப் பற்றி கேள்விப்பட்டு அதனை தங்களது நிறுவனத்தில் கண்காட்சியாக வைத்து விற்பனையும் செய்து வருகின்றனர் மேலும் விவரமறிய 78248 39666 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE