அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயி சான்றிதழை ஸ்டாலின் தர தேவையில்லை: முதல்வர் பழனிசாமி

Updated : நவ 11, 2020 | Added : நவ 11, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
தூத்துக்குடி: 'விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு போலி விவசாயி, உண்மை விவசாயி என்பது எப்படி தெரியும்?' என கேள்வியெழுப்பியுள்ள முதல்வர் பழனிசாமி, 'விவசாயி சான்றிதழை ஸ்டாலின் தர தேவையில்லை,' எனக் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து
TamilnaduCM, Palanisamy, Stalin, DMK, Farmer, Certificate, தமிழகம், முதல்வர், பழனிசாமி, ஸ்டாலின், திமுக, விவசாயி, சான்றிதழ்

தூத்துக்குடி: 'விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு போலி விவசாயி, உண்மை விவசாயி என்பது எப்படி தெரியும்?' என கேள்வியெழுப்பியுள்ள முதல்வர் பழனிசாமி, 'விவசாயி சான்றிதழை ஸ்டாலின் தர தேவையில்லை,' எனக் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



பெற்றோர் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு போலி விவசாயி, உண்மை விவசாயி என்பது எப்படி தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை. எல்லாவற்றையும் திமுக செய்துவிட்டு பழியை மட்டும் அதிமுக மீது போட்டுவிடுகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் வருவதற்கு ஸ்டாலின் தான் காரணம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்படும் என சட்டசபையில் ஸ்டாலின் கூறியுள்ளார். இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
11-நவ-202017:54:14 IST Report Abuse
R S BALA இப்போ நீங்க ரெண்டு பேரும் என்னதான் சொல்லவரிங் ,விவசாயா இருக்கறது பெருமைன்னு சொல்றியேலா.. அல்லது அவர்கள் வாழ்வே வெறும் வெறுமைன்னு எடுத்துக்கணுமா ?
Rate this:
Cancel
11-நவ-202017:07:57 IST Report Abuse
ஆப்பு விவசாயி படம் பாத்தவனெல்லாம் விவசாயிதான். நானும் விவசாயிதான்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-நவ-202016:47:27 IST Report Abuse
Endrum Indian திருட்டு கயவர்கள் கழக வழக்கம் - விவசாயி இல்லாதவன் - விவசாயிக்கு சர்டிபிகேட் கொடுப்பான் படிப்பு வாசனை இல்லாதவன் - நீட் தவறானது என்று சர்டிபிகேட் கொடுப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X