அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பணி ஆணை வழங்கிய முதல்வர்

Updated : நவ 11, 2020 | Added : நவ 11, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வரிடம் வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் முதல்வர் பழனிசாமி பணி ஆணையினை வழங்கினார்.தூத்துக்குடி சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு வேலை வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி வருகை தந்தபோது, தென்பாகம் காவல்
தூத்துக்குடி, மாற்றுத்திறனாளி, மனு, பணிஆணை, முதல்வர், பழனிசாமி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வரிடம் வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் முதல்வர் பழனிசாமி பணி ஆணையினை வழங்கினார்.

தூத்துக்குடி சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு வேலை வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி வருகை தந்தபோது, தென்பாகம் காவல் நிலையம் அருகே மனு அளிப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தார். இதனை கவனித்த முதல்வர், அம்மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரும்படி அழைத்தார்.


latest tamil news


மாரீஸ்வரியின் மனுவினை பரிசீலித்து 2 மணிநேரத்தில் பணி நியமன ஆணையினை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மாரீஸ்வரிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் புற ஆதார முறையில் வார்டு மேலாளர் பணி வழங்கி அதற்கான ஆணை வழங்கப்பட்டது.தனக்கு பணி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக மாற்றுத்திறனாளி மாரீஸ்வரி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
11-நவ-202019:49:35 IST Report Abuse
Shekar Raghavan ஸ்வாமி ,அதே வேகத்தில் கோவில் நிலங்களை விற்க நிரந்தர தடை கொண்டுவர தைரியம் இருக்க?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-நவ-202019:27:27 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தமிழகத்தில் நல்ல மழை.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
11-நவ-202019:23:47 IST Report Abuse
dina சூப்பர் மேன் திரு பழனிசாமி அவர்கள் .நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X