பொது செய்தி

இந்தியா

மோடி அலை அடிக்கிறதா : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : நவ 12, 2020 | Added : நவ 11, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்த வெற்றி எதிரொலிக்கு மோடியின் அலை தான் காரணம் என டுவிட்டரில் டிரெண்ட் ஆகிறது.பீஹாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கட்சி ஒரு அணியாகவும், மகாகட்பந்தன் எனும் தேஜஸ்வி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் -
PmModiSuperWave, ModiHaiToMumkinHai, Bihari, PMModi, Narendramodi,

பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்த வெற்றி எதிரொலிக்கு மோடியின் அலை தான் காரணம் என டுவிட்டரில் டிரெண்ட் ஆகிறது.

பீஹாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கட்சி ஒரு அணியாகவும், மகாகட்பந்தன் எனும் தேஜஸ்வி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கின. தேர்தல் முடிவுகள் நேற்று (நவ.,10) வெளியாகின. இதில், தே.ஜ., கூட்டணி, 125 தொகுதிகளில் வெற்றி பெற்று, அங்கு மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. நிதிஷ்குமார், மீண்டும் முதல்வராகிறார். மகாகட்பந்தன் கூட்டணிக்கு, மொத்தம் 110 தொகுதிகள் கிடைத்துள்ளன.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் மகாகட்பந்தன் கூட்டணியே வெற்றி பெறும் என புள்ளி விவரங்கள் கூறின. ஆனால் அவற்றை அனைத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி உள்ளன. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி எனும் ஒரு பெயர் தான், என சமூகவலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news
பீஹாரில் எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் நாட்டு மக்களுக்காக உழைக்கும் மோடி, நிச்சயம் பீஹார் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் தான் இந்த ஓட்டுகள் விழுந்ததாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் ஓட்டு பா.ஜ.,வுக்கு அதிகம் விழுந்ததாக ஒரு சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள், மாநிலம் விட்டு மாநிலம் கடந்து, நடந்தே பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்ற இன்னல்கள் ஒருபுறம் நடந்தாலும் அதை எல்லாம் மறந்து, மக்கள் மோடியின் மீது கொண்ட நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதனால் தான் மாநிலத்தில் இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உயர்ந்துள்ளது. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடி மட்டும் தான் என ஒரு சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனால் டுவிட்டரில் மோடி அலை வீச தொடங்கி உள்ளது. அதன்காரணமாக #PmModiSuperWave, #ModiHaiToMumkinHai, #Bihari ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
12-நவ-202021:59:31 IST Report Abuse
balakrishnan ஊழல் இல்லாத தலைவர் திரு மோடி அவர்கள் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-நவ-202014:03:25 IST Report Abuse
sankaseshan மேற்கு வங்கத்திலும் சாதிப்பார் டாஸ்மார்க் நாடு ஊழல் லஞ்சத்துக்கு அடிமை சாதியை வைத்து Pilaippu நடத்தும் திராவிட கூட்டம் உள்ளவரை இயலாது murugavel
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-நவ-202013:39:11 IST Report Abuse
konanki திமுக விசிக காங்கிரஸ் மதிமுக இடது சாரி கள் என்கிற பலமான கூட்டணி யுடன் ஓவாஸி கட்சியும் மற்றும் பாரூக் அப்துல்லா தலைமையில் உள்ள குப்கார் கூட்டணி கட்சிகளும் இணைந்து மோடி அலையை தமிழ் நாட்டில் திமுக நிறுத்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X