நிரந்தரமாக 'கை'யை கழுவுங்கள்: காங்கிரசை சீண்டும் குஷ்பு

Added : நவ 11, 2020 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: சமீபத்தில் காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த குஷ்பு, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'நிரந்தரமாக கையை கழுவுங்கள்' என காங்கிரசை விமர்சித்துள்ளார்.கடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை குஷ்பு, பிறகு காங்., கட்சியில் சேர்ந்து தேசிய செய்தித்தொடர்பாளர் பதவியையும் பெற்றார்.
Kushboo, BJP, Congress, கை கழுவுங்கள், குஷ்பு, காங்கிரஸ், பீஹார்

சென்னை: சமீபத்தில் காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த குஷ்பு, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'நிரந்தரமாக கையை கழுவுங்கள்' என காங்கிரசை விமர்சித்துள்ளார்.

கடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை குஷ்பு, பிறகு காங்., கட்சியில் சேர்ந்து தேசிய செய்தித்தொடர்பாளர் பதவியையும் பெற்றார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். இதனை காங்., தலைவர்கள் விமர்சித்து வந்தனர். நேற்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், 'தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாக கருதி தனித்துவிடப்படும்,' என கருத்து தெரிவித்து இருந்தார்.



latest tamil news


இந்நிலையில், பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு விமர்சிக்கும் வகையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: அடிக்கடி கை கழுவுங்கள் இது கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி பீஹாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
12-நவ-202010:02:06 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM காங்கிரஸ் நாலு சீட்டிலும் காங்கிரஸ் ஆட்கள் பத்தி ஆறு சீட்டில் உதய சூரியன் சின்னத்தில் மட்டும் நின்றாள் தான் கூட்டணி வெற்றிபெறுபம் அல்லது அறுபத்தி சீட்டில் போட்டியிட்டால் கூட்டணி அம்பது ஆறு சீட்டை இழக்க நேரிடும் காங்கிரஸ் இதை மனதில் கொண்டு செஅட் பேரம் நடத்தினால் கூட்டணிக்கு நல்லது இல்லையெனில் பிஹரை போல காங்ரஸ் அதிக செஅட் வாங்கி பின்பு பி ஜி பி ஜெயிக்க வஜி சேயையும்
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
12-நவ-202009:49:41 IST Report Abuse
Sankare Eswar எல்லா வடக்கும் தெற்கு வந்து அசிங்கப்படுத்துது
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12-நவ-202007:47:07 IST Report Abuse
elakkumanan இவர் பி ஜெ பி க்கு நிறைய தர்மசங்கடத்தை தருவார்..............இவர் அப்படி ஒன்றும் மிகப்பெரிய கொள்கை மற்றும் அரசியல் பின்புலம் உள்ளவரும் கிடையாது என்பது உண்மைதான்.....ஆனால், மிகப்பெரிய அரசியல் ஞானம் மற்றும் கொள்கை பிடிப்பு கொண்ட திரு இல கணேசன் போன்றோருக்கு இந்த டாஸ்மாக் மாநிலம் அளித்த மரியாதையையும் நினைவில் கொள்ளத்தான் வேண்டும்...............பாம்பு தின்னும் ஊரில், நடு துண்டை தின்று உயிர் வாழ வேண்டும்...இல்லையேல், கொள்கை பேசி பட்டினியாய் சாகனும்.. அதைவிட பயங்கரமான ஆபத்து.... திருடர்கள் மேடைக்கு வர மறைமுகமாக உதவியதாக ஆகிவிடும்...எனவே, இன்றைய தேவை குஷ்பூ............. சந்தேகமே இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X