அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : நவ 11, 2020 | Added : நவ 11, 2020 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின், அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, போலீசார்,
ArnabGoswami, InterimBail, SupremeCourt, RepublicTV, ரிபப்ளிக் டிவி, அர்னாப் கோஸ்வாமி, இடைக்கால ஜாமின், உச்சநீதிமன்றம், உத்தரவு

புதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின், அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமின் கோரி, அர்னாப் உள்ளிட்ட மூவரும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவரும், ஜாமின் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்திலும், அவர்கள் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (நவ.,11) விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக விசாரித்த நீதிபதி சந்திரசூட், 'அர்னாப்பிற்கு ஜாமின் வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு அவரின் கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். நானே அவரின் சேனலை பார்க்க மாட்டேன். ஆனால் அதற்காக நீதியை நிலைநாட்டாமல் இருக்க முடியாது. மாநில அரசுகள் சட்டத்திற்கு எதிராக இவ்வாறு செயல்பட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதை தடுக்கும். மாநில உயர்நீதிமன்றமும் இதில் உறுதியாக செயல்படவேண்டும். அனைத்திற்கும் அரசு, கைது நடவடிக்கையை கையில் எடுத்துக் கொண்டு இருக்க கூடாது. தேர்தல் முடிவுகளில் இந்த சேனல்கள் எல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படியிருக்கும் போது கைது ஏன்?.


latest tamil news


எல்லாவற்றுக்கும் கைது செய்ய கூடாது. உங்களுக்கு ஒரு சேனல் பிடிக்கவில்லை என்றால் அதை பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு தொகுப்பாளர் மீது நடவடிக்கை ஏன்? இதில் மனுதாரரின் உரிமையை மறுக்க கூடாது. இந்த வழக்கில் இன்னும் முழுமையாக எப்.ஐ.ஆர் பதியப்படவில்லை. அதற்குள் அவசரம் ஏன்? நீதிமன்றம் இதில் இப்போது உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அரசின் நடவடிக்கையில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,' எனக்கூறிய நீதிபதி சந்திரசூட், மூவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-நவ-202015:06:48 IST Report Abuse
sankaseshan A big slap on the face of udhav thakare MVA and police commissioner of Mumbai .They have muzzleed freedom of expression of press . None of Indian media like except Dinamalar , other Tamil medias print and visual have not even reported this news . When income tax department s notice to NDTV all these anti-national medias shouted at top voice . Where our country heading towards ?
Rate this:
Cancel
K GANESAN - CHENNAI,இந்தியா
12-நவ-202009:25:29 IST Report Abuse
K GANESAN நான் அர்னாப்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இந்த கைது மிரட்டும் அரசியல். கீழ்த்தரமான அரசியல்.
Rate this:
Cancel
visweswaran a. subramanyam - Edmonton,கனடா
12-நவ-202004:43:22 IST Report Abuse
visweswaran a. subramanyam வணக்கம் இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையின் அதிகார துஷ்ப்ரயோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதைவிட, தமிழக ஊடகங்களின் செயல்பாடுகள் தமிழனுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்திவிட்டது. ஒரு ஆதாரமுமே இல்லாத, ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு மூடப்பட்ட ஒரு வழக்கை மாநில ஆளும் கட்சியும் அதன் கூட்டு கட்சிகளும் அதன் அரசாங்கமும் தனது அரசியல் காழ்ப்பினையும், வெறுப்பினையும், பலத்தையும் காண்பிக்கும் வகையில் காவல் துறைக்கு மாநில முதலமைச்சரின் தலையீட்டின் மூலம் அரசியல் அழுத்தம் தந்ததன் பேரில் வெறும் புகார் அடிப்படையில் தாங்கள் முன்பு செய்த பல விசாரணைகளில் எந்த வித சந்தேகமோ, அல்லது ஆதாரமோ கிடைக்காத போதும் கூட சம்மந்தப்பட்ட ஒரு நபரை அராஜகமாகவும் தடாலடியாகவும் காவல் துறை கைது செய்த விதம் அவர்கள் மீது பொதுமக்களுக்கு உள்ள பொதுவான ஓர் எண்ணத்தை மீண்டும் சீர்குலைப்பதாக அமைந்தது. மேலும் தனிமனிதனின் பேச்சுரிமையை அடக்கும் விதமாக செயல் பட்டது காவல் துறையின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எவ்வளவோ அறமற்ற செயல்கள் அரசு தரப்பிலும் காவல் துறை தரப்பிலும் நடந்திருந்தும் கூட எந்த ஒரு தமிழ்நாட்டு செய்தி ஊடகமும் செய்தியை முழுமையாகக் கொண்டு சேர்க்காமலும், மனசாட்சியுடன் நடந்து கொள்ளாமல் அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பியும் இருந்து வந்தமைக்காக, மனு நீதிச் சோழன் உட்பட நீதி நெறி வழுவாத தமிழ் இனத்தில் வரும் எந்த ஒரு தமிழனையும் இந்தத் தமிழ்நாட்டு செய்தி ஊடகங்கள் ஒரு பெருத்த தலை குனிவை ஏற்படுத்துகிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இதைப் படிப்பதில் நேரம் செலவிட்ட உங்களுக்கு நன்றி வணக்கம்
Rate this:
shankar - milton,கனடா
12-நவ-202008:18:18 IST Report Abuse
shankarஒரு நல்ல தெளிவான அழுத்தமான பதிவு. பாராட்டுக்கள்...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
12-நவ-202010:01:23 IST Report Abuse
தமிழ்வேள்மாநில அரசுகளின் நிர்வாக காவல்துறை அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் .மாநில அரசியல் கடசிகள் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை ஏற்க இயலாது மாநிலங்களின் அதிகாரம் ஒரு மாவட்ட நிர்வாகத்தின் அளவுக்கு குறைக்கப்பட்டால்தான் இந்த அரசியல் கடசிகளின் ஆட்டம் முடிவுக்கு வரும் ..காவல் துறை மற்றும் நீதிமன்றம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் [ ஸ்ரீலங்கா போல ] இருந்தால் லோக்கல் அரசியல்வாதி அனைத்தையும் அடைத்துக்கொண்டு கிடப்பான் இல்லையேல் ஆட்டம் போடுவான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X