ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசி 92% வெற்றி

Updated : நவ 11, 2020 | Added : நவ 11, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
மாஸ்கோ: கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து 92 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக்-வி பயனுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும்
CovidVaccine, SputnikV, Russia, 92Percent, Effective, Against, Coronavirus, ஸ்புட்னிக்_வி, கொரோனா, தடுப்பூசி, தடுப்புமருந்து, 92சதவீதம், வெற்றி

மாஸ்கோ: கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து 92 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக்-வி பயனுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' என்னும் கொரோனா தடுப்பூசியின் இடைக்கால சோதனை முடிவுகளின்படி, இந்த தடுப்பு மருந்து கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.latest tamil news


ரஷ்யாவைச் சேர்ந்த, தொற்றுநோய்க்கான காமாலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம், 'ஸ்புட்னிக்-வி' என்ற கொரோனா தடுப்பு மருந்தை, கண்டுபிடித்து உள்ளதாக, ஆகஸ்ட், 11ல் வெளியிட்டது. இதை, அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்தாக, ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிவு செய்தது. இதையடுத்து, உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக, ஸ்புட்னிக்-வி கருதப்படுகிறது. தற்போது இந்த கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனையின்படி, கொரோனாவிலிருந்து 92 சதவீதம் மக்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதற்கிடையில், இந்த ஸ்பூட்னிக்-வி தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
12-நவ-202010:15:37 IST Report Abuse
J. Vensuslaus Based on previous reports, we thought that Sputnik V was already undergoing the final trial and that it could be available for vaccination in a few months, if tests were successful. We are now told that the trials haven't even started It could take one full year to complete the trials, mass produce and distribute the vaccine, if the trials are fine. Other potential vaccine candidates are likely to take even more time to test and manufacture. This means that we are a long away from a vaccine for inoculation to protect against corona. Social distancing, mass wearing, hand washing, etc. have to continue, in the meantime.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
11-நவ-202018:39:56 IST Report Abuse
S. Narayanan தேங்க்ஸ் டு ருஷ்யா. பாக்கி எட்டு சதவிகிதமும் ஒப்புதல் கிடைத்து விட்டால் நலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X