சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ரூ.30 கோடி கோயில் நிலம் மீட்பு

Updated : நவ 12, 2020 | Added : நவ 12, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் கிராமத்தில் உடையாம்பாளையம் அண்ணமார் விஸ்வநாத ஈஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.26 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை மீட்டது.இந்த கோயில் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் சிலர் ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வந்தனர். கடந்த ஜன. மாதம் வரை குத்தகை பணம்
கோயில் நிலம், மீட்பு, கோவை

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் கிராமத்தில் உடையாம்பாளையம் அண்ணமார் விஸ்வநாத ஈஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.26 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை மீட்டது.

இந்த கோயில் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் சிலர் ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வந்தனர். கடந்த ஜன. மாதம் வரை குத்தகை பணம் செலுத்தியுள்ளனர். திடீரென அந்த நிலம் இவர்களுக்குச் சொந்தமானது போல் போலியாக நகர நில அளவை பதிவேடு சான்று பெற்றுள்ளனர். அதை ஆதாரமாக காட்டி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் பின் போலி ஆவணங்கள் தயாரித்து சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் நான்கு பேருக்கு அந்த நிலம் சொந்தமானதாக பத்திரப்பதிவும் செய்துள்ளனர். சார் பதிவாளர் முத்துக்குமார் பத்திரப்பதிவு துறை பதிவேடுகளை சரிபார்க்காமல் கோவில் சொத்தை அந்நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.xஅதன்பின் அவர்கள் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தபோது உப்பிலிபாளையம் கிராம மக்களுக்கு விஷயம் தெரிந்தது. ஊர் மக்கள் திரண்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டா மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆவணங்களை சரிபார்த்தபோது டி.எஸ்.எல்.ஆர். போலியாக தயாரித்து கிரையம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட இடத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 'கோயிலுக்குச் சொந்தமான நிலம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டடது. அண்ணமார் விஸ்வநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் செந்தில்குமார், கிருஷ்ணகுமார், விஜயகுமார், வசந்தாமணி மற்றும் சிங்காநல்லுார் சார் பதிவாளர் ஆகிய ஐந்து பேர் மீது கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news




'நில அபகரிப்பு வழக்கு'


உப்பிலிபாளையம் கிராம மக்கள் கூறியதாவது:bகோவிலுக்கு சொந்தமான, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, நான்கு பேருக்கு சொந்தமானதாக, போலியாக, நில அளவை பதிவேடு செய்துள்ளனர்.இதில், டி.எஸ்.எல்.ஆர்., சான்று தயாரித்துக் கொடுத்த சர்வேயர் மற்றும் ஆவணங்களை சரிபார்க்காமல், கிரையம் செய்து கொடுத்த, சார்பதிவாளர் மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மீதும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
12-நவ-202020:16:36 IST Report Abuse
thulakol தமிழ்நாடு பூரா கோவில் குளம் குட்டை மீட்டு எடுங்கள்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-நவ-202016:51:57 IST Report Abuse
Endrum Indian 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.26 ஏக்கர் நிலம் அல்லவே இது இதில் ஏதோ கோல்மால் இருக்கின்றது???1 ஏக்கர் சாதாரண விளைச்சல் இல்லா அத்தவங்கக்கட்டில் இருப்பது போல இருக்கும் இந்த நிலம் வெறும் ரூ 26 லட்சம் முதல் 30 லட்சம் தான் பெரும் அரசு எஸ்டிமேட் படி ஒரு ஏக்கர் ரூ 10 கோடி என்றால் அது என்ன சென்னை அண்ணா சாலையில் உள்ள இடமா என்ன???(அங்கு மிக மிக அதிகம்)
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
12-நவ-202015:49:25 IST Report Abuse
Gnanam சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஏரி குளங்கள், மற்றும் நெடுஞ்சாலைகளின் அபகரிப்பு பகுதிகள் போன்றவற்றை , அரசாங்கமே முன்வந்து கணக்கெடுப்பது அவசியம். யாருடைய முறையீட்டிற்காகவும் காத்திருக்க தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X