சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 12, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்மிளகாய் பொடி நல்லதாஉணவில் மிளகாய் பொடி அதிகம் சேர்ப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கிறது என அமெரிக்க ஆய்வு தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் 5.7 லட்சம் பேரிடம் உணவு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே சீனா, ஈரான், இத்தாலி, அமெரிக்காவில் எடுத்த நான்கு ஆய்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டது. இதில் மிளகாய் பொடி அதிகம் சேர்ப்பதால், ஆன்டி ஆக்சிடென்டை

அறிவியல் ஆயிரம்
மிளகாய் பொடி நல்லதா

உணவில் மிளகாய் பொடி அதிகம் சேர்ப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கிறது என அமெரிக்க ஆய்வு தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் 5.7 லட்சம் பேரிடம் உணவு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே சீனா, ஈரான், இத்தாலி, அமெரிக்காவில் எடுத்த நான்கு ஆய்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டது. இதில் மிளகாய் பொடி அதிகம் சேர்ப்பதால், ஆன்டி ஆக்சிடென்டை அதிகப்படுத்தி ரத்த குளோக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது, நீரிழிவு, உடல்பருமனுக்கு எதிராகவும் செயல்படுகிறது. ஆனால் எந்த மிளகாய் பொடி நல்லது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாம்.

தகவல் சுரங்கம்
கோல்கட்டாவின் பெருமை

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது 'ஹவுரா பாலம்'. ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 1936ல் பணி தொடங்கி 1942ல் நிறைவடைந்தது. பாலத்தின் நீளம் 705 மீட்டர். அகலம் 71 அடி. இதில் இரண்டு புறமும் 15 அடி நடந்து செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. நான்கு வழிச் சாலையாக அமைக்கப் பட்டு உள்ள இப்பாலத்தின் மீது தினமும் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. மேலும் 4.5 லட்சம் பேர் நடந்தும் செல்கின்றனர். இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் 'ரபீந்திர சேது' பாலம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X