இந்தியாவுடன் ஜோ பைடன் நட்பு பாராட்டுவார் : மூத்த அதிகாரி தகவல்

Updated : நவ 12, 2020 | Added : நவ 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் தந்து ஜோ பைடன் செயல்படுவார் என ஒபாமா அரசாங்கத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்து பொறுப்பு அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் தந்து ஜோ பைடன் செயல்படுவார் என ஒபாமா அரசாங்கத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



latest tamil news


அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்து பொறுப்பு அதிபர் டிரம்ப் சட்ட போராட்டங்களில் இறங்கியுள்ளார். சீனா, ரஷ்யாவைத் தவிர அனைத்து நாடுகளும் ஜோ பைடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. பைடனின் ஆட்சிக் காலத்தில் இந்திய - அமெரிக்க உறவு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி தெற்காசிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த அதிகாரி, அலிஸா அய்ரெஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். "பைடன் எப்போதும் இரு நாட்டு நல்லுறவுக்கு ஆதரவானவர். தற்போது பிடன் - ஹாரிஸ் கூட்டணி அதற்கு அதிக முன்னுரிமை அளிக்கும்" என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறியதாவது: இந்திய - அமெரிக்க உறவில் பாதுகாப்பு துறை டிரம்ப் நிர்வாகத்தில் முன்னேற்றம் அடைந்த முக்கிய பகுதியாகும். அவற்றிற்கு பைடன் நிர்வாகம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். இருநாட்டு உறவுகளின் ஆரம்ப ஆதரவாளராக இருந்தவர் பைடன். 15 ஆண்டுகளுக்கு முன்பே இருநாடுகளையும் நெருக்கமான கூட்டாளிகளாக கருதினார். காங்கிரஸ் ஆட்சியில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக காரணமாக இருந்தவர் பைடன். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்ட ஒழுங்கை இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து ஆதரிப்போம் என அவரது பிரச்சார வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


பைடனின் உலகளாவிய முன்னுரிமைகளான கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வது போன்றவற்றிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை. இந்திய அரசின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை பைடன் எதிர்க்கக்கூடும். சூரிய மின்சார உற்பத்தியில் இந்தியா உலகின் தலைவராக வளர்ந்து வருகிறது.

இத்துறையில் டிரம்ப் நிர்வாகம் தராத ஆதரவை பைடன் அளிப்பார். ஒபாமாவின் பதவிக் காலத்தில் இருந்ததைப் போலவே பைடன் நிர்வாகத்தின் போதும் தூய்மையான ஆற்றல் மற்றும் பருவநிலை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-நவ-202021:25:48 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஒரு மூனு வருசத்துக்கு "நமஸ்தே பைடன்"ன்னு மாத்ரம் சொல்லவுட்றாதீங்க .................
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
12-நவ-202021:03:11 IST Report Abuse
siriyaar அமேசான் கூக்குள் வால்மார்ட் வியாபாரம் நல்ல நடந்த தாரளமாக நட்பு காட்டுவார், இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்யறாங்களோ அதில் 20 சதம் கமிஷன் போதும். அதில் பாதிய மதமாற்றம் செய்ய இந்தியாவிலேயே முதலீடு செய்வார். மேலும் மேற்கு இந்திய கம்பெனி அமைய உதவினால் மோடி உள்ளவரை அவர் பிரதமர் பிறகு கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தால் போதும் இந்தியாவில் 200 லட்சம் கோடி கடனை அமெரிக்கா ஏற்கும். கமலா ஹாரிஸ் மேற்கு இந்திய கம்பெனியை வழி நடத்துவார்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-நவ-202020:48:57 IST Report Abuse
Ramesh Sargam பாராட்டித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், உலகத்திற்கு கொரானாவை பரப்பிய சைனாவையும், அதே உலகத்திற்கு தீவிரவாதத்தை பரப்பிய பாகிஸ்தானையும் எதிர்க்க இந்தியாவின் உதவி குறிப்பாக அமெரிக்காவுக்கு தேவை. ஆகையால் இந்தியாவுடன் ஜோ பைடன் நட்பு பாராட்டுவார். பாராட்டித்தான் ஆகவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X