தீபாவளி வழிபாட்டு பாடல் அமெரிக்க பாடகி அசத்தல்

Added : நவ 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க பாடகி மேரி மில்பென் வெளியிட்ட, 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' என்ற வழிபாட்டு பாடல், அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், வெளியிட்ட பாடல், சமூக

வாஷிங்டன்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க பாடகி மேரி மில்பென் வெளியிட்ட, 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' என்ற வழிபாட்டு பாடல், அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், வெளியிட்ட பாடல், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' என்ற ஹிந்து மத வழிபாட்டு பாடலை, அவர் பாடும் வகையில், அந்த, 'வீடியோ' எடுக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கு ஏற்ப, அவரது உடையும், இந்திய பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.அமெரிக்க பாடகி ஒருவர், இதுபோன்ற ஒரு ஹிந்து பாடலை பாடி, வீடியோ வெளியிட்டது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மில்பென் கூறியதாவது:ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே என்ற பாடல், தீபாவளி பண்டிகையின்போது, உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களின் வீடுகளில் ஒலிக்கும் மிக அழகான பாடல். வழிபாடு மற்றும் கொண்டாட்டத்திற்கான பாடல் இது. இந்த பாடல் என்னை பெரிதும் ஈர்த்தது. இந்திய கலாசாரத்தின் மீதான என் ஆர்வத்தை மேலும் துாண்டியது.உலகம் முழுதும், வெவ்வேறு சமூகத்தினர், பலவிதமான மத வழிபாடுகளை பின்பற்றுகின்றனர். அவை அனைத்தையும் மதிக்கிறேன்.

இந்திய வம்சாவளியினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்காக இந்த பாடலை வெளியிடுவதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
13-நவ-202011:49:02 IST Report Abuse
Nallavan Nallavan சமத்துவ மனப்பான்மை இருக்கிறது ............ காரணம் இவர் கறுப்பர் இனப்பெண் என்பதால் அல்ல ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X