'அதை மறக்கலாமா?'
தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' என்ற பெயரில், 2021 சட்டசபை தேர்தலுக்கான மதுரை நகர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருப்பரங்குன்றத்தில் சமீபத்தில் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், காணொலி காட்சியில் பேசுகையில், 'தமிழகத்தில் இன்று நடப்பதை, அ.தி.மு.க., ஆட்சி எனக் கூறக் கூடாது. 30 பேர் கொண்ட ஒரு கும்பலின் ஆட்சி என்று தான் கூற வேண்டும். மதுரைக்கு, சிறு நன்மைகளை கூட, இவர்களால் செய்ய முடியவில்லை' என்றார்.இதைக் கேட்ட, இளம் நிருபர், 'தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் ஸ்டாலின் ஆதரவாளர்களே நுழைய முடியவில்லை... அ.தி.மு.க., ஆட்சியில் தான், அவர்களுக்கு அனுமதி கிடைத்தது... அதை மறக்கலாமா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE