சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

துரத்தி அடியுங்க!

Added : நவ 12, 2020
Share
Advertisement
துரத்தி அடியுங்க!'இவரைப் போன்ற நடிகர்களுக்கு, 'சீட்' கொடுத்ததற்கு பதிலாக, கட்சிக்காக உழைத்தவருக்கு கொடுத்திருக்கலாம்' என, பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான சன்னி தியோல் பற்றி, கோபத்தில் குமுறுகின்றனர், அந்த கட்சியின், பஞ்சாப் நிர்வாகிகள். சன்னி தியோல், பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகன். பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்குள்ள, 'ஜாட்'


அக்கம் பக்கம்

துரத்தி அடியுங்க!

'இவரைப் போன்ற நடிகர்களுக்கு, 'சீட்' கொடுத்ததற்கு பதிலாக, கட்சிக்காக உழைத்தவருக்கு கொடுத்திருக்கலாம்' என, பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான சன்னி தியோல் பற்றி, கோபத்தில் குமுறுகின்றனர், அந்த கட்சியின், பஞ்சாப் நிர்வாகிகள். சன்னி தியோல், பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகன். பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்குள்ள, 'ஜாட்' சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், கடந்த லோக்சபா தேர்தலில், பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட, சன்னி தியோலுக்கு வாய்ப்பு கொடுத்தது, பா.ஜ., மேலிடம். எதிர்பார்த்தது போலவே, அந்த தேர்தலில், அவர் வெற்றி பெற்றார். அதற்கு பின், தொகுதி பக்கமே, அவர் தலைகாட்டுவது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை. லோக்சபாவுக்கும் வருவது இல்லை. தற்போது, விவசாய சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாபில் கடுமையான போராட்டங்கள் நடக்கின்றன. விவசாய சட்டங்களின் நன்மை குறித்து, பஞ்சாப் விவசாயிகளுக்கு விளக்குவதற்காகவும், ஒரு குழுவை அமைத்துள்ளது, பா.ஜ., மேலிடம்.
மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி, ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர், இதில் இடம் பெற்றுள்ளனர். ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சன்னி தியோல், இந்த குழுவில் இடம் பெற விரும்பவில்லை என கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால், பஞ்சாப் மாநில பா.ஜ.,வினர், அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 'அடுத்த தேர்தலில், 'சீட்' கேட்டு வந்தால், கட்சி மேலிடம், அவரை துரத்தி அடிக்க வேண்டும்' என, கொந்தளிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X