சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் முருகன்: அ.தி.மு.க., ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்கள் யாத்திரை தொடரும். எங்கள் கட்சிக்கென கொள்கை உள்ளது. அ.தி.மு.க., எங்களின் கூட்டணி கட்சி; அவர்களுக்கு தனி கொள்கை உண்டு. நாங்கள் திட்டமிட்டபடி, யாத்திரையை தொடர்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின்படி, அனைவருக்கும், தங்கள் விருப்பப்படி, கோவிலுக்கு செல்ல உரிமையுண்டு அதன் அடிப்படையில், நான் செல்கிறேன்.

'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் முருகன்: அ.தி.மு.க., ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்கள் யாத்திரை தொடரும். எங்கள் கட்சிக்கென கொள்கை உள்ளது. அ.தி.மு.க., எங்களின் கூட்டணி கட்சி; அவர்களுக்கு தனி கொள்கை உண்டு. நாங்கள் திட்டமிட்டபடி, யாத்திரையை தொடர்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின்படி, அனைவருக்கும், தங்கள் விருப்பப்படி, கோவிலுக்கு செல்ல உரிமையுண்டு அதன் அடிப்படையில், நான் செல்கிறேன்.

'டவுட்' தனபாலு: உங்கள் விருப்பப்படி, வீட்டின் அருகில் உள்ள வினாயகர் கோவிலுக்குச் சென்றால், யாருக்கும் பிரச்னையில்லை. ஆனால், நீங்கள் கூட்டத்தை சேர்த்து, கையில் வேலுடன் பேரணியாக அல்லவா செல்கிறீர்கள். தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது, பிற கட்சிகள் இப்படி, 'பந்தா' செய்தால், அக்கட்சிக்கு பிடிக்குமா; அதனால் தான் கைது செய்கிறது. சரி, பா.ஜ., யாத்திரைக்கு மக்கள் ஆதரவு இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
நான், வீடியோ கான்பரன்சிங்கில் பேசுவதால், நாட்டில் என்ன நடக்கிறது என, எனக்கு தெரியவில்லை என, சட்ட அமைச்சர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். முதல்வர் பழனிசாமியை போல, சேலத்திற்கும், சென்னைக்கும் மட்டும் அலைந்தவன் அல்ல. தமிழகத்தில் நான் போகாத ஊர் இல்லை; செல்லாத கிராமம் இல்லை என்ற அளவுக்கு மக்களை அறிந்தவன்.

'டவுட்' தனபாலு: உண்மை நிலை தெரியாமல், நீங்கள் இருட்டறையில் இருக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. நீங்கள் இப்படி சொன்ன நாளில், முதல்வர், இ.பி.எஸ்., துாத்துக்குடியில் இருந்தார்; மக்கள் நல திட்டங்களை அறிமுகம் செய்தார். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் முதல்வர், வாரம் ஒரு முறையோ, 15 நாட்களுக்கு ஒருமுறையோ, சேலம் செல்வது உங்களுக்கு பிடிக்கலையா?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, வழங்கப்படும், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், 983 ஜாதிகளால், அதன் பயனை அனுபவிக்க முடியவில்லை. இதற்கு முடிவு காண, ரோகிணி ஆணையத்தின் அறிக்கை, விவைராக தாக்கல் செய்து, நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

'டவுட்' தனபாலு: உண்மையை உங்கள் வாயாலேயே ஒத்துக் கொண்டுள்ளீர்கள். ஓ.பி.சி., இட ஒதுக்கீடு, சில அரசியல் கட்சிகளுக்குத் தான் லாபமே தவிர, உண்மையில், ஓ.பி.சி., மக்களுக்கு பலன் பெற்றுத்தரவில்லை என்பதை, 'டவுட்' இன்றி, விளக்கி விட்டீர்கள். 30 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காதது இனிமேலா கிடைக்கப் போகிறது?

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
13-நவ-202012:42:53 IST Report Abuse
Suppan ஒதுக்கீட்டில் இடம் பெற்றஆதிக்கக் குடும்பங்களே மேலும் மேலும் ஒதுக்கீடு பெற்றன. இதற்காகத்தான் கருணா முதற்கொண்டு இவர்கள் கிரீமை லேயர் முறையை எதிர்த்தார்கள். பின் எப்படி மற்றவர்கள் ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியும்?
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
13-நவ-202008:56:16 IST Report Abuse
Arul Narayanan Dr. Ramdas doesn't mean all OBCs, only Vanniars. Not to think the all OBCs are still down only. Our PM is an OBC.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-நவ-202006:04:23 IST Report Abuse
D.Ambujavalli எப்படி? பதிமூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட, ஸ்டெரிலைட் போராட்டத்துக் கலவரத்தால் உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர், காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தந்தை மகன் குடும்பப் பக்கமே எட்டிப்பார்க்காதவர், இப்போது எதோ ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு வேலை கொடுத்து நாடகம் ஆடுகிறார், எல்லாம் தேர்தல் ட்ராமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X