பொது செய்தி

இந்தியா

பயணம் துவக்கியது 'வாகிர்' நீர்மூழ்கி கப்பல்

Added : நவ 12, 2020
Share
Advertisement
மும்பை:நம் கடற்படையின், அதிநவீன, 'வாகிர்' நீர்மூழ்கி கப்பல், மஹாராஷ்டிராவின், தெற்கு மும்பை யில் இருந்து பயணத்தை துவங்கியது.நம் கடற்படையின், 'ப்ராஜெக்ட் -- 75' என்ற திட்டத்தின் கீழ், ஐரோப்பிய நாடான, பிரான்சைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த, கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை, கடற்படை தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐந்தாவது, 'ஸ்கார்பீன் பிரிவு' கப்பலான, 'வாகிர்'

மும்பை:நம் கடற்படையின், அதிநவீன, 'வாகிர்' நீர்மூழ்கி கப்பல், மஹாராஷ்டிராவின், தெற்கு மும்பை யில் இருந்து பயணத்தை துவங்கியது.

நம் கடற்படையின், 'ப்ராஜெக்ட் -- 75' என்ற திட்டத்தின் கீழ், ஐரோப்பிய நாடான, பிரான்சைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த, கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை, கடற்படை தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐந்தாவது, 'ஸ்கார்பீன் பிரிவு' கப்பலான, 'வாகிர்' என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பலின் துவக்க விழா, நடந்தது.

'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த துவக்க விழாவுக்கு, ராணுவ இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தலைமை வகித்தார். அமைச்சரின் மனைவி விஜயா, நீர்மூழ்கி கப்பலை துவக்கி வைத்தார்.மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள, மாஸாகான் கப்பல் தளத்தில் இருந்து, 'வாகிர்' புறப்பட்டது.

இந்த நீர்மூழ்கி கப்பல், மேம்பட்ட ஒலி உறிஞ்சும்நுட்பங்கள், குறைந்த கதிர்வீச்சு இரைச்சல் மற்றும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுஉள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில், வேட்டையாடும் திறன் உடைய, ஆழ் கடலில் மட்டுமே காணப்படும், வாகிர் என்ற மீனின் பெயர், இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X