பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : நவ 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நவ., 13, 1935ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில், 1935 நவ., 13ல் பிறந்தவர், பி.சுசீலா. துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். விஜயநகரம் இசைக் கல்லுாரியில், டிப்ளமா படித்து, முதல் வகுப்பில் தேறினார். கடந்த, 1953ல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான, பெற்ற தாய் படத்தில், 'எதுக்கழைத்தாய் எதுக்கு...' என்ற பாடல் வழியாக, பின்னணி பாடகியாக, சினிமா துறைக்குள் நுழைந்தார்.
 
இதே நாளில் அன்று

நவ., 13, 1935

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில், 1935 நவ., 13ல் பிறந்தவர், பி.சுசீலா. துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். விஜயநகரம் இசைக் கல்லுாரியில், டிப்ளமா படித்து, முதல் வகுப்பில் தேறினார். கடந்த, 1953ல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான, பெற்ற தாய் படத்தில், 'எதுக்கழைத்தாய் எதுக்கு...' என்ற பாடல் வழியாக, பின்னணி பாடகியாக, சினிமா துறைக்குள் நுழைந்தார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என, பல தலைமுறைகளாக, தன் குரலால், ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட, பல்வேறு மொழிகளில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். 'பத்ம பூஷன், கலைமாமணி' உட்பட, ஏராளமான விருதுகள், இவரை கவுரவித்துள்ளன.பின்னணி பாடகி, பி.சுசீலா பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
13-நவ-202009:45:09 IST Report Abuse
R Hariharan நீக்கல் ஏன் கே வ மஹாதேவன் பற்றி குறிப்பிடவில்லை. அவரது இசையில் பல் பாடல்கள் சகா வரம் பெற்றவை. குறிப்பாக தேவர் பிலிம்ஸ், எ பி நகராஜ்ரான் படங்கள் பல ஹிட்டான பாடல்கள் உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X