கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டிவி'க்களில் ஆபாச விளம்பரம்: உயர் நீதிமன்றம் தடை

Updated : நவ 14, 2020 | Added : நவ 12, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
மதுரை: பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'களில் ஒளிபரப்பத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:'டிவி' சேனல்களில் ஆணுறை, ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருத்துவம், ஐஸ்க்ரீம், வாசனை திரவியங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில்,
'டிவி'க்கள், ஆபாச விளம்பரம் ,உயர் நீதிமன்றம் தடை

மதுரை: பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'களில் ஒளிபரப்பத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:
'டிவி' சேனல்களில் ஆணுறை, ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருத்துவம், ஐஸ்க்ரீம், வாசனை திரவியங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில், தேவையின்றி ஆபாசங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை முன்தணிக்கை செய்யாமல் ஒளிபரப்புவது, நாகரீக சமுதாயத்திற்கு நல்லதல்ல.

சினிமாக்களுக்கு, 'யு, ஏ, யு ஏ' வகை தணிக்கை சான்றுகள் வழங்கப்படுகின்றன. இதை உணர்ந்து, சில படங்களை, தியேட்டர்களில் பார்ப்பதை பெண்கள், குழந்தைகள் தவிர்க்கின்றனர்.'டிவி' நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் மக்கள் பார்க்கின்றனர். ஆபாச காட்சிகளுடன் கூடிய விளம்பரங்கள், குழந்தைகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாலியல் ரீதியான குற்றங்கள், வன்முறையில் ஈடுபட வழிவகுக்கின்றன.ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'க்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.

விளம்பரங்களை முன் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். விதிகளை மீறி இத்தகைய நிகழ்ச்சிகள், விளம்பரங்களை ஒளிபரப்பும், 'டிவி' சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் செய்து, தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிடடுள்ளார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.


புகழேந்தி

அமர்வு உத்தரவு:

பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'க்களில் ஒளிபரப்ப, இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-நவ-202010:04:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பிரிதிவி உள்ளாடை விளம்பரத்துக்கு உடன் தடை போடுங்கள்
Rate this:
Cancel
raguram - madurai,இந்தியா
13-நவ-202018:41:19 IST Report Abuse
raguram ஆபாசமான காட்சிகளுக்கு தடை செய்வது போல விபரித வன்முறைகளை தூண்டி உருபட விடாத இந்த பப்ஜி கேம் இந்தியா என்ற பெயரில் வருவதையும் கடுமையாக தடை செய்யபட வேண்டும்.தற்போது நீதிமன்றங்களின் மக்களின் நலனுக்காக தானாக முனவந்து உதவுவது போல், இதற்கும் முன் வந்து தடை விதிக்க வேண்டும். பலரின் வாழ்வு பறி போகும் முன் இவைகளையும் தடை செய்யபட வேண்டும்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-202018:21:05 IST Report Abuse
 rajan பூமர் விளம்பரம் உயர்தர ஆபாசம் அதையும் தடை செய்யுங்கள்... அப்புறம் ஆன்லைன் சூதாட்டம் ஏன் இன்னும் தடை செய்யப்படவில்லை.. 18 பேர்களுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டு இறந்த பின்பும் இன்னும் மெத்தனமாக இருப்பது ஏன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X