சென்னை:சுகாதாரத்துறை சார்பில், '108 அவசர கால ஊர்தி' சேவைக்காக, 24.77 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட, 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், '108 ஆம்புலன்ஸ்' சேவை திட்டத்தில், 1,180 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் வழியே, இதுவரை, 25.34 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட, 1.02 கோடிக்கும் மேலானவர்கள் பயனடைந்துள்ளனர்.ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப் படுத்த, நடப்பாண்டில், 500 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், 125 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என, மார்ச் மாதம், சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
அதை செயல்படுத்தும்விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ், 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, 500 ஆம்புலன்ஸ்கள் வாங்க, 103.50 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டது. முதற் கட்டமாக, 20.65 கோடி ரூபாய் செலவில், உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட, 90 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஆக., 31ம் தேதி, முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டன. தற்போது, இரண்டாம் கட்டமாக, 24.77 கோடி ரூபாய் மதிப்பில், உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட, 108 எண்ணிக்கையிலான, புதிய ஆம்புலன்ஸ் சேவைகள், துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடையாளமாக, தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் பழனிசாமி ஒன்பது ஆம்புலன்ஸ் வாகனங்களை, கொடியசைத்து, துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
டில்லி பள்ளியில் கட்டடம் திறப்பு
டில்லியில், 90 ஆண்டுகளாக, டில்லி தமிழ் கல்வி கழகம் சார்பில், ஏழு இடங்களில், மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலை பள்ளிகள், நடத்தப்பட்டு வருகின்றன.இப்பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை, தமிழ் மொழி கட்டாய பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில், விருப்ப பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு படிக்கும், 7,500 மாணவர்களில், 85 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும், தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், தமிழ் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தமிழ் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கணக்கில் வைத்து, டில்லி வளர்ச்சி குழுமம் சார்பில், டில்லி தமிழ் கல்விக் கழகத்திற்கு, மயூர் விகாரில், புதிய பள்ளிக் கட்டடம் கட்ட, நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்ட, தமிழக அரசு சார்பில், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.கடந்த, 2018 அக்., 26ல், ஜெயலலிதா, புதிய பள்ளி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மயூர் விகார் பள்ளி வளாகத்தில், ஜெயலலிதா பெயரில் புதிதாக, 6,515 சதுர மீட்டர் பரப்பளவில், நான்கு தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை, முதல்வர் பழனிசாமிவீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பாண்டியராஜன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE