சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நினைவிடம் கட்டும் பணி, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆர்., நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நினைவிடத்தை, ஜெ., மறைந்த, டிச., 6ல் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., - ஜெ., நினைவிடத்தை சுற்றிலும், புல்வெளிகள், அழகிய பூ மரங்கள் மற்றும் பூச்செடிகள் நடவு செய்யப்படவுள்ளன. இதற்காக, ஆந்திராவின், ராஜமுந்திரியில் உள்ள தனியார் பண்ணையில், அவை வளர்க்கப்பட்டு தயாராகியுள்ளன.தீபாவளி பண்டிகைக்கு பின், அங்கிருந்து லாரிகளில் அவை எடுத்து வரப்பட்டு, நினைவிடத்தில் நடவு செய்யப்பட உள்ளன. இதற்காக, பொதுப்பணி துறை செயலர் மணிவாசன் உத்தரவுப்படி, பொறியாளர்கள் குழுவினர், ராஜமுந்திரி செல்ல உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE