பொது செய்தி

தமிழ்நாடு

'மக்கள் நடமாடும் இடங்களில் பட்டாசு வெடிக்காதீங்க!'

Added : நவ 12, 2020
Share
Advertisement
சென்னை:'மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், பட்டாசு வெடிக்கக்கூடாது' என, தீயணைப்பு துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.நாடு முழுவதும், நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில், காலை, 6:00 - 7:00; மாலை, 7:00 - 8:00 மணி வரை, பட்டாசு வெடிக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:*

சென்னை:'மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், பட்டாசு வெடிக்கக்கூடாது' என, தீயணைப்பு துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும், நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில், காலை, 6:00 - 7:00; மாலை, 7:00 - 8:00 மணி வரை, பட்டாசு வெடிக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் நேரத்தில், நன்கு இடைவெளியை பின்பற்றி, தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்

* பெரியவர்கள் உதவியின்றி, குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள், முதியோர் மற்றும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர்; உடல் நலக்குறைவு உள்ளோர் இருக்கும் இடங்களில், பட்டாசு வெடிக்கக் கூடாது

* அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்

* எப்போது பட்டாசு வெடித்தாலும், திறந்தவெளியை தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

* மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது

* பட்டாசு வெடிக்க, நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. பட்டாசு திரியில் தீ வைக்கும் போது, முகத்தை வேறு பக்கம்திருப்பிக்கொள்ள வேண்டும்

* பட்டாசு வெடிக்கும் போது, கட்டாயம் செருப்பு அணிந்து இருக்க வேண்டும்; பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்

* பட்டாசு வெடிக்கும் போது, அருகில், வாளியில் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, மணல் வைத்து இருப்பதும் நல்லது

* பட்டாசுகளை குவியலாக வெடிக்கக்கூடாது

* அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தில் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்

* ஒருவேளை விபத்து ஏற்பட்டால், உடனடியாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்காக, 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X