பொது செய்தி

தமிழ்நாடு

மழையில் மின் சாதனங்கள் அருகில் செல்லாதீர்!

Added : நவ 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'மழையின் போது, டிரான்ஸ்பார்மர், மின் கம்பம், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களின் அருகில் செல்ல வேண்டாம்' என, பொது மக்களை, தமிழக அரசின் மின் ஆய்வு துறை வலியுறுத்தியுள்ளது.மின் ஆய்வு துறை விடுத்துள்ள, மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்:* மின்சார ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற,

சென்னை:'மழையின் போது, டிரான்ஸ்பார்மர், மின் கம்பம், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களின் அருகில் செல்ல வேண்டாம்' என, பொது மக்களை, தமிழக அரசின் மின் ஆய்வு துறை வலியுறுத்தியுள்ளது.

மின் ஆய்வு துறை விடுத்துள்ள, மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்:

* மின்சார ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற, தரமான மின் சாதனங்களையே பயன்படுத்த வேண்டும். உடைந்த, 'சுவிட்ச், பிளக்கை' உடனே மாற்ற வேண்டும்

* மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள, 'ஸ்டேர் ஒயர்' மீது அல்லது மின் கம்பத்தின் மீது, கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்கவும்

* மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ, கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அதன் மீது, விளம்பர பலகைகளை கட்டக்கூடாது

* மழை காலங்களில், டிரான்ஸ்பார்மர், மின் கம்பம், மின் வினியோக பெட்டி, ஸ்டே ஒயர் ஆகியவற்றின் அருகில் செல்லாதீர். மேலும், அறுந்து விழுந்த மின் கம்பி அருகில் செல்லாதீர். உடனே, மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளியுங்கள்

* மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை போதுமான இடைவெளிவிட்டு, கட்ட வேண்டும். டிரான்ஸ்பார்மர், துணைமின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்

* மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு, மின் வாரிய அதிகாரிகளை அணுக வேண்டும். மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாதபட்சத்தில் சுவிட்சை, 'ஆப்' செய்து வைக்கவும்

* மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை, தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டாம். மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனே, 'மெயின்' சுவிட்சை நிறுத்த வேண்டும்

* தண்ணீர் தேங்கி நிற்கும் போது, மின் வினியோக பெட்டி அருகில் செல்ல வேண்டாம். இடி அல்லது மின்னலின் போது, தஞ்சம் அடைய, மின் கம்பி, மின் கம்பம், மரங்கள், உலோக கம்பி போன்றவை இல்லாத, தாழ்வான பகுதியை தேர்ந்தெடுக்கவும்

* இடி, மின்னலின் போது, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி, 'டிவி' போன்றவற்றை பயன்படுத்தாதீர். அந்த சமயத்தில், திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran V - Chennai,இந்தியா
13-நவ-202012:00:06 IST Report Abuse
Ramachandran V ஆமாம். நாங்கள் அப்படியே போட்டுவிட்டு செல்வோம். மக்கள்தான் பார்த்து செல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X