பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக கொள்முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு

Added : நவ 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பொது நுாலக துறையின் புத்தக கொள்முதலுக்கு, 2018, 2019ம் ஆண்டு புத்தகங்களை அனுப்புமாறு, பொது நுாலக இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, தமிழக பொது நுாலக இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பொது நுாலக இயக்ககத்தின் கீழ் இயங்கும், நுாலகங்களுக்கு, 2018, 2019ம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட, தமிழ், ஆங்கிலம் புத்தகங்களை வாங்க, பதிப்பாளர் மற்றும்

சென்னை:பொது நுாலக துறையின் புத்தக கொள்முதலுக்கு, 2018, 2019ம் ஆண்டு புத்தகங்களை அனுப்புமாறு, பொது நுாலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக பொது நுாலக இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பொது நுாலக இயக்ககத்தின் கீழ் இயங்கும், நுாலகங்களுக்கு, 2018, 2019ம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட, தமிழ், ஆங்கிலம் புத்தகங்களை வாங்க, பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் களிடம் இருந்து, புத்தகங்கள் பரிசீலினைக்கு வரவேற்கப்படுகின்றன.

அவற்றை அரசு அமைக்கும் புத்தக தேர்வுக்குழு பரிசீலித்து, தேர்வு செய்யப்படும் புத்தகங்கள் மட்டும் வாங்கப்படும். இந்த நடவடிக்கையில், 2018, 2019ம் ஆண்டு பதிப்பான தமிழ், ஆங்கில புத்தகங்கள் மட்டுமே பரிசீலினைக்கு எடுத்து கொள்ளப்படும்.

புத்தகங்களை அதற்கான ஏ, பி, சி என்ற, மூன்று வகை படிவங்கள் மற்றும் குறுந்தகட்டுடன், டிசம்பர், 11க்குள் பொது நுாலக இயக்குனரகம், எண், 737/௧ அண்ணா சாலை, சென்னை-02 என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.புத்தக பதிவு கட்டணம், சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகிய விபரங்களை, www.connemara publiclibrarychennai.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-202013:18:36 IST Report Abuse
Bhaskaran சென்றமுறை குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள் ஏராளமாக வாங்கி நூலகங்களில் அடுக்கி வைத்துள்ளார்கள் ( ஒருவரும் சீந்தவில்லை .எடைக்கு தள்ளி விட்டுட்டாங்க போலிருக்கு ).இந்தமுறை எந்த சாமியார் புத்தகம் வாங்கப்போறாங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X