சென்னை:
'உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீடு பற்றி, தீர்ப்பு வழங்குவது போல முதல்வர் பேசுவதா' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:'தேர்தல் வழக்கு வேறுவிதமாக அமைந்தால், ஸ்டாலின் ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது' என, முதல்வர் பேசியிருக்கிறார். இதன் வாயிலாக, எந்நாளும் நிறைவேறவே முடியாத, தன் அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது, கண்டனத்துக்குரியது.
இன்னும் சில மாதங்களில், ஆட்சி போய் விடும் என்பதால், வழக்குகளை எதிர்கொள்ள, முதல்வர் பயப்படுகிறார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, ஒரு மேல்முறையீடு பற்றி, தீர்ப்பு வழங்குவது போல, முதல்வர் பேசியிருக்கிறார். சென்னை, கொளத்துார் தொகுதி தேர்தல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நான் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என, கூறிவிட்டது. தோல்வி அடைந்த வேட்பாளர், என் மீது வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என, தீர்ப்பு வந்து விட்டது.
அந்தத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டை சுட்டிக்காட்டி, ஒரு முதல்வர், உச்ச நீதிமன்றத்திற்கே கட்டளை பிறப்பிக்கும் வகையில், அதுவும் அரசு விழாவில் அறைகூவல் விடுத்து பேசுவது, நீதிமன்ற அவமதிப்பு. அந்த அளவிற்கு முதல்வருக்கு, என் மீது எரிச்சல் வர காரணம், பதவி பறிபோகிறதே என்ற பயம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE