அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது'

Added : நவ 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:''தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி:பீஹாரில், பா.ஜ., அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தமிழக பா.ஜ., சார்பில், பீஹார் மக்களுக்கு நன்றி.தமிழகத்தில், வெற்றி வேல் யாத்திரை, 6ம் தேதி திருத்தணியில், பல்வேறு இடையூறுக்கு இடையில் துவங்கியது.
 'தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது'

சென்னை:''தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:பீஹாரில், பா.ஜ., அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தமிழக பா.ஜ., சார்பில், பீஹார் மக்களுக்கு நன்றி.தமிழகத்தில், வெற்றி வேல் யாத்திரை, 6ம் தேதி திருத்தணியில், பல்வேறு இடையூறுக்கு இடையில் துவங்கியது. திட்டமிட்டபடி யாத்திரை நடக்கிறது.

நேற்று முன்தினம் முதல் தீபாவளி வரை, விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும், 17ம் தேதி யாத்திரை துவங்கி, தொடர்ந்து நடக்கும். திருச்செந்துாரில், டிச., 6ல் நிறைவடைய உள்ளது. வரும், 22ம் தேதி, மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா; 23ம் தேதி, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்; 24ம் தேதி, கர்நாடக செய்தி தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி; டிச., 2ல் தேசிய இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி ஆகியோர் யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.

நிறைவு கூட்டத்தில் பங்கேற்க, தேசிய தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, எந்த இடையூறு வந்தாலும், அதை எதிர்கொண்டு யாத்திரை நடத்தப்படும். நேற்று முன்தினம் நடந்த சம்பவங்கள் வருந்தத்தக்கவை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், வீட்டில் இருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என, அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசின் செயலை ஏற்க முடியாது. எந்த இடையூறையும் எதிர்கொள்வோம். எங்கள் தொண்டர்கள், சோர்ந்து போக மாட்டார்கள். எங்கள் இலக்கை நோக்கி, முன்னே செல்வோம். கூட்டணி வேறு; கொள்கை வேறு. எங்கள் கட்சி பணியை நாங்கள் செய்கிறோம். அரசு தடை போடுகிறது. கொரோனா தொற்று தான் காரணம் என்றால், அது, அனைவருக்கும் பொருந்த வேண்டும்.

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்திற்கு செல்லும் தொண்டர்கள் கைது செய்யப்படவில்லை. முதல்வரை வரவேற்கும், அ.தி.மு.க., தொண்டர்கள் மீது நடவடிக்கை இல்லை. பா.ஜ.,வினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? தேர்தல் கூட்டணியை, தேசிய தலைமை முடிவு செய்யும்; வேல் யாத்திரைக்கு, பொதுமக்கள் ஆதரவு உள்ளது.நாடு முழுதும், காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை நோக்கி செல்வது போல, தமிழகத்தில் காங்., - காங்கிரஸ் கூட்டணி இல்லாத தமிழகம் உருவாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, முருகன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
13-நவ-202020:59:32 IST Report Abuse
Easwar Kamal முதல கோவில் குள்ள உன்னை அனுமதிக்கிரகிலனு பாரு தம்பி. அங்க கூட்டம் ஆப்பு வைக்க கத்துக்கிட்டு இருக்கும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202017:27:10 IST Report Abuse
r.sundaram காவி நிறம் என்றால் கழகங்களுக்கு ஒரு பயம் எப்போதுமே உண்டு. அதனால்தான் இப்படி. காவியின் பக்கம் எப்போதுமே நீதி நேர்மை ஞாயம் எல்லாம் இருக்கும் என்பதால்தான் கழகங்களுக்கும் பயம். இந்த பயத்தை வைத்தே அவர்களை வெல்ல வேண்டும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-நவ-202017:15:54 IST Report Abuse
Darmavan சூர சம்ஹாரம் த்ரவிட கட்சிகளுக்கு ஏற்படும் சீக்கிரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X