அரசியல் செய்தி

தமிழ்நாடு

'யார் எதை, எழுத வேண்டும் என்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல'

Updated : நவ 13, 2020 | Added : நவ 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:''யார் எதை சொல்ல வேண்டும்; எழுத வேண்டும் என்று கூறுவது, ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல,'' என, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி கூறினார். அவர் அளித்த பேட்டி: ஆட்சி அதிகாரமும், அரசியலும், எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என, முடிவு செய்வது, ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்.மக்களின் கலை வடிவங்கள், சிந்தனைகள் மற்றும் எது

சென்னை:''யார் எதை சொல்ல வேண்டும்; எழுத வேண்டும் என்று கூறுவது, ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல,'' என, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி கூறினார்.

அவர் அளித்த பேட்டி: ஆட்சி அதிகாரமும், அரசியலும், எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என, முடிவு செய்வது, ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்.மக்களின் கலை வடிவங்கள், சிந்தனைகள் மற்றும் எது இலக்கியங்கள் என்பதை, அரசு தீர்மானிக்கக் கூடாது. ஒரே ஒரு அமைப்பு கொடுத்த புகாரை தொடர்ந்து, அருந்ததிராயின் புத்தகத்தை நீக்குவது ஏற்புடையதல்ல.

யார் எதை சொல்ல வேண்டும், எதை எழுத வேண்டும் என்று கூறுவது, ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. கல்லுாரி மாணவர்களுக்கு எது சரி, எது தவறு என, தெரிந்து கொள்வதற்காக, எதிர் கருத்துக்களும், அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும்.அந்தக் கருத்துக்களை அவர்கள் ஏற்பதா; வேண்டாமா என்பது குறித்து, கல்லுாரியில் விவாதிப்பது தான் ஆரோக்கியமான விஷயம். ஆனால், விவாதமே நாட்டில் இருக்கக் கூடாது என்ற சூழ்நிலைக்கு, நாம் சென்று கொண்டிருப்பது, பன்முகத்தன்மை உள்ள நாட்டிற்கு நிச்சயமாக நல்லதல்ல.இவ்வாறு, கனிமொழி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-202013:29:18 IST Report Abuse
Bhaskaran ஆலடி அருணானு ஒரு திமுக ஆள் எண்ணம் அப்படீன்னு ஒரு மாத இதல்நடத்தினார் .அது திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து அரசு நூலகங்களில் வாங்குவார்கள் .அதில்வந்த ஒரு கதை அதில் தந்தைக்கு தெரியாமல் கல்லூரியில்படிக்கும் மகள் விபசார m செய்ய ஹோட்டல் போனால் அங்கே வாடிக்கையாளராக அவள் தந்தை வந்திருப்பார் .இம்மாதிரி நல்லொழுக்கம் கற்பிக்கும் கதைகளை இந்த இயக்கத்தவரைத்தவிர உலகில் யாரும் எழுதமுடியாது
Rate this:
Cancel
Ramachandran V - Chennai,இந்தியா
13-நவ-202011:54:28 IST Report Abuse
Ramachandran V ஆனால் மாணவர்கள் யாரும் ஹிந்தி படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லுவோம். எல்லோரும் கேட்கவேண்டும்.
Rate this:
Cancel
K.N.Sridharan - Bangalore,இந்தியா
13-நவ-202007:02:33 IST Report Abuse
K.N.Sridharan எது இலக்கியம் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது. ஆமாம் கற்பழிப்பு கதைகளை எழுதி இளைஞர்களை கெடுத்த திமுக முடிவு செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X