நிலுவையில் உள்ள ஜாமின் மனுக்கள் தகவல் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு

Added : நவ 12, 2020
Share
Advertisement
புதுடில்லி:உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமின் மனு குறித்து விபரம் அளிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை தற்கொலைக்கு துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில்,

புதுடில்லி:உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமின் மனு குறித்து விபரம் அளிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை தற்கொலைக்கு துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், 'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமின் மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, நேற்று முன் தினம், உத்தரவிட்டது. இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோகலே என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் விபரம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஜம்மு -- காஷ்மீரில் இருந்து, ஏராளமான ஆட்கொணர்வு மனுக்கள், டில்லி கலவரங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள், உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, முதலில் உயர் நீதிமன்றத்தை நாடும்படி கூறப்படுகிறது.ஆனால், சில இடைக்கால ஜாமின் மனுக்களில் குறைகள் இருந்தாலும், அவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சில வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்படுகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இடைக்கால ஜாமின் மனுக்குள் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். பதிவாளர் அலுவலகத்தில் மனுவை தாக்கல் செய்த நாள் முதல், விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, சராசரியாக தேவைப்படும் கால அவகாசம் எவ்வளவு என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி



'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை விமர்சித்து, நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா என்பவர், சமூகவலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டார். இவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், நேற்று அனுமதி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X