புதுடில்லி:இந்திய பயனாளிகளுக்காக, பல மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள, 'பப்ஜி மொபைல் இந்தியா' என்ற புதிய விளையாட்டு, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில், பப்ஜி என்ற விளையாட்டு, சில மாதங்களுக்கு முன் வரை, மிகவும் பிரபலமாக இருந்தது. இளைஞர்கள் மத்தியில், அதிகம் விளையாடப்படும் விளையாட்டாக விளங்கியது. எனினும், கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையிலான விளையாட்டாகவே அது பார்க்கப்பட்டது. நாளடைவில், அந்த விளையாட்டிற்கு அடிமையான பலரின் உயிர்களையும், அது பறித்தது. இதையடுத்து, தீவிர ஆலோசனைக்குப் பின், அந்த பப்ஜி விளையாட்டை, இந்தியாவில் தடை செய்து, மத்திய அரசு, கடந்த செப்டம்பரில் அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில், பல அம்சங்களுடன், 'பப்ஜி மொபைல் இந்தியா' என்ற விளையாட்டு, நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டது. பழைய பப்ஜி விளையாட்டில், நம் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில், அரை நிர்வாண கதாப்பாத்திரங்கள் இடம்பிடித்திருந்தன. இந்த புதிய விளையாட்டில், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பயனாளிகளுக்கு ஏற்ற வகையில், கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE