புதுடில்லி:மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து, பாகிஸ்தான் வெளியிட்டுள்ள பெயர் பட்டியலை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா, கூறியதாவது: மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008, நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியலை, பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
இதில், ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட, லஷ்கர் அமைப்பை சேர்ந்த, சில பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. படகில் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் பெயரும் உள்ளன. ஆனால், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள், சதி திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE