ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சச்சின் பைலட், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சச்சின் பைலட், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது, நேற்று உறுதிபடுத்தப்பட்டது.
இது குறித்து அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:நான் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டு உள்ளேன். கடந்த சில நாட்களில், என்னை சந்தித்துச் சென்ற அனைவரும், தயவுசெய்து மருத்துவ பரிசோதனையை செய்துகொள்ளுங்கள். டாக்டர்களின் அறிவுரை பின்பற்றி, நடந்து வருகிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன் என நம்புகிறேன்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE