கூட்டுறவு ஊழியர் போனஸ் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு ஊழியர் 'போனஸ்' அறிவிப்பு

Added : நவ 12, 2020
Share
சென்னை:தமிழகத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, 10 சதவீதம், 'போனஸ்' வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட, பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என, 2ம் தேதி, தமிழக அரசு அறிவித்தது. இதில், கூட்டுறவு சங்கங்கள் இடம் பெறவில்லை. இதனால், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஏமாற்றம் அடைந்தனர். இது

சென்னை:தமிழகத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, 10 சதவீதம், 'போனஸ்' வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட, பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என, 2ம் தேதி, தமிழக அரசு அறிவித்தது. இதில், கூட்டுறவு சங்கங்கள் இடம் பெறவில்லை. இதனால், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து, கூட்டுறவு ஊழியர் சங்கங்களும், போனஸ் வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதனால், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச போனஸ், 8.33 சதவீதம், கருணைத் தொகை, 1.67 சதவீதம் சேர்த்து, 10 சதவீதம் போனஸ் வழங்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதை, இன்றே நடைமுறைப்படுத்த, கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் சுப்பிரமணியன், அனைத்து இணைப் பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X