கொண்டை ஊசி வளைவு பாறை உடைப்பு 3 மாநில போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டை ஊசி வளைவு பாறை உடைப்பு 3 மாநில போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு

Added : நவ 12, 2020
Share
கூடலுார்:ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலை தவளைமலை அருகே, சாலை விரிவாக்க பணிக்காக, ரசாயன கலவை பயன்படுத்தி, பாறைகளை உடைக்கும் பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலை, தவளைமலை அருகே, கொண்டை ஊசி வளைவு உள்ளது. இங்கு, சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது.பாதிப்புஇப்பகுதியில், எதிர் எதிரே வரும் வாகனங்கள் வழிவிடுவதில் சிரமம் உள்ளதால், அடிக்கடி, தமிழகம்

கூடலுார்:ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலை தவளைமலை அருகே, சாலை விரிவாக்க பணிக்காக, ரசாயன கலவை பயன்படுத்தி, பாறைகளை உடைக்கும் பணி துவங்கியது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலை, தவளைமலை அருகே, கொண்டை ஊசி வளைவு உள்ளது. இங்கு, சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது.பாதிப்புஇப்பகுதியில், எதிர் எதிரே வரும் வாகனங்கள் வழிவிடுவதில் சிரமம் உள்ளதால், அடிக்கடி, தமிழகம் - கேரளா - கர்நாடகா போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதே பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர். இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சாலை விரிவாக்க பணியை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.இதற்காக, நேற்று சாலையை ஒட்டிய பாறைகளில் துளையிட்டு, ரசாயன கலவை பயன்படுத்தி, பாறைகளை உடைத்து அகற்றி வருகின்றனர்.


ரசாயன கலவை



இப்பணி நிறைவு பெற்றால், மூன்று மாநில போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதியில், சாலையோரம் உள்ள பாறைகளை, வெடிவைத்து அகற்ற முடியாது. 'இதற்கு மாற்றாக, பாறைகளில் துளையிட்டு, ரசாயன கலவை பயன்படுத்தி, உடைத்து அகற்றும் பணி நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப் பணி, விரைவில் முடிக்கப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X