சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் 2 மாணவர் பலி

Added : நவ 12, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி:வாகனம் மோதி, பைக்கில் சென்ற இரு மாணவர்கள் பலியாயினர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு மெஜஸ்டிக் லட்சுமணபுரியைச் சேர்ந்தவர் பால் எபினேசர், 22; இவரது நண்பர் பாபு, 20. இவர்கள் பெங்களூரில் உள்ள, ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கின்றனர்.இருவரும், சென்னையில் உள்ள பால் எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில், பங்கேற்க, நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு பல்சர்

கிருஷ்ணகிரி:வாகனம் மோதி, பைக்கில் சென்ற இரு மாணவர்கள் பலியாயினர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு மெஜஸ்டிக் லட்சுமணபுரியைச் சேர்ந்தவர் பால் எபினேசர், 22; இவரது நண்பர் பாபு, 20. இவர்கள் பெங்களூரில் உள்ள, ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கின்றனர்.

இருவரும், சென்னையில் உள்ள பால் எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில், பங்கேற்க, நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு பல்சர் பைக்கில் புறப்பட்டனர்.கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வெத்தலைதோட்டம் என்ற இடத்தில், அதிகாலை, 2:30 மணிக்கு சென்ற போது, பைக் மீது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாயினர். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X