சம்பவம் செய்தி

தமிழ்நாடு

12 வயது இரட்டையர் ஊருணியில் மூழ்கி பலி

Added : நவ 12, 2020
Share
Advertisement
துாத்துக்குடி:துாத்துக்குடியில், 12 வயது இரட்டையர்கள் ஊருணியில் மூழ்கி இறந்தனர்.துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார் அருகே, மேல அரசரடியைச் சேர்ந்த செல்வராஜ் - பூரணம் தம்பதிக்கு, மகேஸ்வரி, 14 என்ற மகள், 12 வயது இரட்டையர்களான, அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.துாத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில், ஓட்டல் நடத்தி வந்த செல்வராஜ், சில ஆண்டுகளுக்கு முன்

துாத்துக்குடி:துாத்துக்குடியில், 12 வயது இரட்டையர்கள் ஊருணியில் மூழ்கி இறந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார் அருகே, மேல அரசரடியைச் சேர்ந்த செல்வராஜ் - பூரணம் தம்பதிக்கு, மகேஸ்வரி, 14 என்ற மகள், 12 வயது இரட்டையர்களான, அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

துாத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில், ஓட்டல் நடத்தி வந்த செல்வராஜ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஓட்டலை பூரணம் கவனிக்கிறார். மகள் மகேஸ்வரிக்கு, ஓட்டலில் இருந்து உணவு கொண்டு செல்வது வழக்கம்.நேற்று முன்தினம், அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் ஆகியோர் உணவு எடுத்து சென்ற போது மாயமாகினர். பூரணம் புகார் அளித்தார். புதியம்புத்துார் போலீசார் தேடினர். நேற்று காலை, இருவரும் ஊருணியில் இறந்து கிடந்தனர்.உணவு எடுத்து சென்றவர்கள் ஊருணியில், குளிக்க இறங்கியபோது நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X