ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண் துறை சார்பில், ஆர்.எஸ்.,மடையில் நிலைக்கதக்க மானாவாரி வளர்ச்சி இயக்க திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் வேளாண் துணை இயக்குனர் சேக் அப்துல்லா, உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மானாவாரி பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், ரகத்தேர்வு விதைநேர்த்தி, பயிர் இடைவெளி, களைக்கட்டுப்பாடு, ஊடுபயிர் சாகுபடி, மானாவாரி மேம்பாட்டு குழுவின் செயல்பாடு குறித்து கூறினர். விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி இளஞ்செழியன், உயிர் உர உற்பத்தி மைய அலுவலர் அம்பேத்குமார், வேளாண் அலுவலர் கலைவாணி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE