கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டிவி'க்களில் ஆபாச விளம்பரம் உயர் நீதிமன்றம் அதிரடி தடை

Added : நவ 12, 2020
Share
Advertisement
மதுரை:பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'களில் ஒளிபரப்பத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தணிக்கை சான்றுவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:'டிவி' சேனல்களில் ஆணுறை, ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருத்துவம், ஐஸ்க்ரீம், வாசனை திரவியங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு

மதுரை:பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'களில் ஒளிபரப்பத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


தணிக்கை சான்று

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:'டிவி' சேனல்களில் ஆணுறை, ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருத்துவம், ஐஸ்க்ரீம், வாசனை திரவியங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில், தேவையின்றி ஆபாசங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை முன்தணிக்கை செய்யாமல் ஒளிபரப்புவது, நாகரீக சமுதாயத்திற்கு நல்லதல்ல.

சினிமாக்களுக்கு, 'யு, ஏ, யு ஏ' வகை தணிக்கை சான்றுகள் வழங்கப்படுகின்றன. இதை உணர்ந்து, சில படங்களை, தியேட்டர்களில் பார்ப்பதை பெண்கள், குழந்தைகள் தவிர்க்கின்றனர். 'டிவி' நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் மக்கள் பார்க்கின்றனர். ஆபாச காட்சிகளுடன் கூடிய விளம்பரங்கள், குழந்தைகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாலியல் ரீதியான குற்றங்கள், வன்முறையில் ஈடுபட வழிவகுக்கின்றன.


நடவடிக்கை

ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'க்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். விளம்பரங்களை முன் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். விதிகளை மீறி இத்தகைய நிகழ்ச்சிகள், விளம்பரங்களை ஒளிபரப்பும், 'டிவி' சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் செய்து, தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'க்களில் ஒளிபரப்ப, இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X