பரமக்குடி : பரமக்குடி - எமனேஸ்வரத்தில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் கோ-ஆப்டெக்ஸ் 2020க்கான உற்பத்தி திட்டம் வழங்காததால் ஜவுளியைகொள்முதல் செய்யாமல் உள்ளனர். சங்கங்களில் ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளதுடன், தொழில் கிடைக்காமல் நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி உதவி கைத்தறி இயக்குநர்அலுவலகத்தின் கீழ்,80 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கச்சாப்பொருட்களைப்பெற்று தொழில் செய்கின்றனர். கைத்தறி துணிவிற்பனைக்காக துவக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்வருடம் தோறும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட காலங்களில் உற்பத்தி திட்டம் கொடுத்து அதனை கொள்முதல்செய்யும். தற்போது 2020 க்கான உற்பத்தி திட்டம் கொரோனாவை காரணம் காட்டி வழங்காமல் உள்ளதுடன், முன்பு கொடுத்த ஆர்டர்களையும்கொள்முதல் செய்யாமல் உள்ளனர்.
காட்டன் பை காட்டன்,மெசரஸ் பட்டு உள்ளிட்ட சேலை ரகங்கள் ஒவ்வொரு கூட்டுறவுசங்கங்களிலும் தேங்கி கிடக்கின்றன. தொடர்ந்து நெசவாளர்களுக்கு தொழில் வழங்குவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், தேங்கிய ஜவுளிகளை விற்பனைசெய்ய முடியாமல் சங்கங்கள் திணறி வருகிறது. மத்திய,மாநில அரசுகள் நெசவாளர்கள் நலனை காக்கும் வகையில்உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதீய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர்காசிவிஸ்வநாதன் கூறியதாவது: கொரோனாவால் நெசவாளர்கள்பல்வேறு இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழலில், கோ-ஆப்டெக்ஸ்ரகங்கள் கொள்முதல் செய்யாமல் உள்ளதுடன், உற்பத்தி திட்டம்கொடுக்காமல் உள்ளதால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இது போன்ற சூழலில் அரசு உடனடியாக தலையிட்டு சீர் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE