பரமக்குடி : பரமக்குடி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நவ., 15 ல் துவங்கவுள்ளது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி கோயிலில், நவ., 15 இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து தினமும் இரவு 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். நவ., 20 அன்று மாலை 4:00 மணிக்கு சுவாமி சக்திவேலுடன் மயில் வாகனத்தில் வீதிவலம் வருவார்.
7:00 மணிக்கு வைகை ஆற்றங்கரையில் கோயில் முன்பு சூரசம்ஹார லீலை நடக்கும். மறுநாள் காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. இரவு பட்டினபிரவேசம் நடக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE