பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பருவ மழை மிக குறைவு; சிக்கலில் பல ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி

Added : நவ 12, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் 2019 அக்டோபரில் 384 மி.மீ., மழை பெய்தது. ஆனால் இந்தாண்டு 97 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளதால் மானாவாரியாக நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. வடகிழக்குபருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் 2019 அக்டோபரில் 384 மி.மீ., மழை பெய்தது. ஆனால் இந்தாண்டு 97 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளதால் மானாவாரியாக நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. வடகிழக்குபருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். 2019 அக்டோபரில் அதிகபட்சமாக 384 மி.மீ., வரை மழைபெய்ததால் நெல்விளைச்சல் அதிகரித்து நல்ல மகசூல் கிடைத்தது. இவ்வாண்டு அதற்குமாறாக அக்டோபரில் குறிப்பிடும்படியாக மழைபெய்யவில்லை, கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்து மழைபதிவாகியுள்ளது. இதனால் நெல்விதைகள் முளைக்காமல் நிலத்தை மறுஉழவு செய்து மீண்டும் நெல் விதைத்துள்ளனர்.

விவசாயி பாக்கியநாதன் கூறுகையில்,' எங்கள் பகுதியில் 2500 எக்டேரில் நெல்சாகுபடி செய்கிறோம். எந்த ஆண்டும் இல்லாத அளவில் பருமழை பொய்த்துவிட்டது. 20ஏக்கரில் நெல் விதைத்து ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக நெல்விதைகளை ஊறவைத்து மீண்டும் விதைத்துள்ளோம்,,'என்றார்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X