கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாதனை விளையாட்டு வீரருக்கு சாதக முடிவு: ஐகோர்ட் உத்தரவு

Added : நவ 13, 2020
Share
Advertisement
மதுரை:சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில். சாதனை படைத்த மாற்றுத் திறன் விளையாட்டு வீரர் ரஞ்சித்குமாரின் பணியை வரன்முறைப்படுத்த கோரிய வழக்கில், 'தமிழக அரசு பரிசீலித்து, சாதகமான முடிவை தெரிவிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை பெரிய ஊர்சேரியை சேர்ந்த, ஜோதிமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ரஞ்சித்குமார்.

மதுரை:சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில். சாதனை படைத்த மாற்றுத் திறன் விளையாட்டு வீரர் ரஞ்சித்குமாரின் பணியை வரன்முறைப்படுத்த கோரிய வழக்கில், 'தமிழக அரசு பரிசீலித்து, சாதகமான முடிவை தெரிவிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை பெரிய ஊர்சேரியை சேர்ந்த, ஜோதிமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ரஞ்சித்குமார். இவர் சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில், 60 பதக்கங்கள் வென்றுள்ளார். மாற்றுத் திறன் விளையாட்டு வீரர் பிரிவில், வாழ்நாள் சாதனைக்கான தயான்சந்த் விருதை, ஜனாதிபதியிடம் பெற்றுஉள்ளார்.

மதுரையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளராக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார். அவரது பணியை வரன்முறைப் படுத்த, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை.வரன்முறைப்படுத்தி, அதற்குரிய சம்பளப் பலன்களை வழங்க, தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டு உள்ளார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'பணியை வரன்முறைப்படுத்த கல்வித் தகுதி, தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி புறக்கணிக்கக் கூடாது. பரிசீலித்து, சாதகமான முடிவை, தமிழக அரசுத் தரப்பில், டிச., 1ல் தெரிவிக்க வேண்டும்' என்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X