கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அரசு அலுவலங்களில் களைகட்டும் தீபாவளி வசூல் குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சில தினங்களாக விஜிலென்ஸ் குழு மலைப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து விழித்துக் கொண்ட அதிகாரிகள் கவனிப்பவர்களை அலுவலகங்களுக்கு வரவேண்டாம் எனக் கூறிவிடுகின்றனர். விஜிலன்ஸ் குழுவுக்கு தண்ணிகாட்டும் விதமாக தனியார் விடுதிகளில் சந்திப்பு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தீபாவளி நேரத்தில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE