சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளத்தில் உருண்ட ஜீப் 5 பேர் படுகாயம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
போடி:போடிமெட்டு மலைப்பாதையில், வேகமாக வந்த ஜீப், 200 அடி பள்ளத்தில் உருண்டதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே மணப்பட்டியைச் சேர்ந்தவர், ஜீப் டிரைவர் முருகன், 65. அதே பகுதியைச் சேர்ந்த, மூன்று ஆண்கள், ஒரு பெண் என நால்வருடன், போடி குப்பிநாயக்கன்பட்டி உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்து, போடிமெட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.மதியம், 3:00

போடி:போடிமெட்டு மலைப்பாதையில், வேகமாக வந்த ஜீப், 200 அடி பள்ளத்தில் உருண்டதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே மணப்பட்டியைச் சேர்ந்தவர், ஜீப் டிரைவர் முருகன், 65. அதே பகுதியைச் சேர்ந்த, மூன்று ஆண்கள், ஒரு பெண் என நால்வருடன், போடி குப்பிநாயக்கன்பட்டி உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்து, போடிமெட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மதியம், 3:00 மணியளவில், 15வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, சாலையில் இருந்த பாறைக்கற்கள் மீது ஏறிய ஜீப், 200 அடி பள்ளத்தில் உருண்டது.பலத்த காயமடைந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X