தமிழ்நாடு

எச்சரிக்கை! கொசுப்புழு உற்பத்திக்கு அபராதம்; டெங்குவை தடுக்க சுகாதாரத்துறை

Added : நவ 13, 2020
Share
Advertisement
திண்டுக்கல்: கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, திண்டுக்கல் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டெங்கு பரவாமல் தடுக்க, நோய் தடுப்பு முறைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொசு

திண்டுக்கல்: கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, திண்டுக்கல் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டெங்கு பரவாமல் தடுக்க, நோய் தடுப்பு முறைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொண்டாலும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. காய்ச்சலின் தன்மையை அறிய பாதிக்கப்படுவோர் குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று காலத்தில் டெங்கு காய்ச்சலும் மக்களை பாதிக்காமல் இருக்க கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும். அதனால் வீடுகளில் உள்ள தொட்டிகள், பாத்திரங்களை சுத்தமாக வைக்க வேண்டும். தேவையற்ற இடங்கள், பொருட்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X